(து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகளை யத்துய்த்த தோழி, தலைமகன்பாற் சென்று அவனை 'இற்றைநாள் இங்குத் தங்கிப் போவா' யென்றலும், அவன் உடன்படாமை கண்டு 'அவனது செலவை நீக்குமாறு மாலைப்பொழுதிலே தனித்து வருந்தும்படி எம்மைக் கைவிட்டுப் பெயருஞ் சேர்ப்பன் ஏறுகின்ற தேர்க்குதிரைகள் ஒறுக்கப் படுவனவாக' வென்று குதிரைகளின்மேல் வைத்து வரைவுடன்படக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, 'என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அன்புதலையடுத்த வன்புறை' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் |
| சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் |
| கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் |
| கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ |
5 | வீரை வேண்மான் வெளியன் தித்தன் |
| முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் |
| வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக் |
| கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து |
| அவல நெஞ்சினம் பெயர உயர்திரை |
10 | நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் |
| ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே. |
(சொ - ள்.) வீரை வேள்மான்வெளியன் தித்தன் முரசு முதல் வெள் கோடு இயம்ப நுண்பனி அரும்ப மாலை விளக்கின் - 'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும்