பக்கம் எண் :


215


     4. பிள்ளையென்னும் பெயர் நடப்பவற்றிற்கு வந்தது (தொல்.மரபு.5, பேர்.; மரபு.26, இளம்.)

     மு. ‘இதனுள், தொகுசெந்நெற்றிக் கணங்கொள் சேவலென்பதனையும், கடுநவைப் படீஇயரோ நீயே யென்பதனையும், இன்று யிலெடுப்பியோ யென்பதனையும் கூட்டிப் பொருள் கொண்டமையான் கொண்டுகூட்டுப் பொருள் கோளாயிற்று’ (யா.வி. 95.)

     ஒப்புமைப் பகுதி 1-2. சேவலின் கொண்டைக்குத் தோன்றிப்பூ; “கொய்மலர தோன்றிபோற், சூட்டுடைய சேவலும்”, “பூத்தலை வாரணப்போர்” (சீவக.73, 120.)

     3. நள்ளிருள் யாமம்: குறுந். 6:1, ஒப்பு.

     4. பிள்ளை வெருகு: புறநா. 117:8,

     அல்கிரை; “கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய” (அகநா. 3:4)

     (கு-பு.) அல்கிரை யென்பதற்கு மிக்க இரையென்று அகநானூற்று அரும்பதவுரை யாசிரிய ரெழுதினர்.

     5. கடுநவைப் படீஇயரோ: “கடுநவைப் படீஇயர் மாதோ” (அகநா. 145:14); படீஇயர் - படுக; குறுந்.243:5, 395:5; ஐங்.142:3.

     1-5. சேவல் வெருகிற்கு உணவாதல: “குவியடி வெருகின்பைங்கணேற்றை, ஊனசைப் பிணவி னுயங்குபசி களைஇயர், தளிர்புரை கொடிற்றிற் செறிமயி ரெருத்திற், கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ வன்ன, நெற்றிச் சேவ லற்றம் பார்க்கும்” (அகநா. 367: 8-12.) 7.

     ஏமவின்றுயில்: “இருண்மென் கூந்த லேமுறு துயிலே” (அகநா. 92:13.)

(107)
  
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வந்திலர்; யான் உய்யேன்” என்று வருந்திக் கூறியது.)
  108.    
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் 
     
கறவை கன்றுவயிற் படரப் புறவிற் 
     
பாசிலை முல்லை யாசில் வான்பூச  
     
செவ்வான் செவ்வி கொண்டன்  
5
றுய்யேன் போல்வ றோழி யானே. 

என்பது பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது.

வாயிலான்றேவன்,

     (பி-ம்.) 4. ‘செவ்வறன’்; 5. ‘றுய்வன’்.

     (ப-ரை.) தோழி---, மழைவிளையாடும் - மேகங்கள் விளையாடுதற்கிடமாகிய, குன்றசேர் சிறுகுடி - மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து, கறவை - மேயும் பொருட்டு