கிளிமங்கலங்கிழார் (பி-ம். கிள்ளிமங்கலங்கிழார்.) (பி-ம்.) 2-3. ‘நீர் நிலைப’்; 3-4. ‘புதன்மலியொண்’; 7.’றின்னா வெறி தரும்’, ‘றின்னா தெறி வரும’்.
(ப-ரை.) தோழி---, நீர - நீரிலுள்ள, நீலம் பைம்போது உளரி - நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து, புதல - புதலிலே உள்ள, பீலி ஒள் பொறி கருவிளை - மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை, ஆட்டி - அலைத்து, நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த, வண்ணம் துய்மலர் - நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள், உதிர - உதிரும் படி, தண்ணென்று - குளிர்ச்சியையுடையதாகி, இன்னாது எறிதரும் வாடையொடு - இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால், என் ஆயினள் கொல் - எத்தன்மையினள் ஆனாளோ, என்னாதோர் - என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராராயினும் - வாராவிடினும், வரினும் -