பக்கம் எண் :


238


     தலைவியின் தோள் பசந்தமைக்குக் காரணம் தலைவனை எதிர்ப் படாமை.

     மேற்கோளாட்சி 2. கலையென்னும் பெயர் முசுவிற்கு வந்தது (தொல். மரபு. 46, பேர்.)

     5-6. அல்ல குறிப்படுதல் (தொல். களவு. 42, ந.)

     மு. மெய்யே யென்ற லென்னும் மெய்ப்பாடு வந்தது: ‘இதனுட் கூறியதென ஒரு சொல்வர வேண்டும்’ (தொல். மெய்ப். 22, இளம்); இரவுக்குறி வரும் தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனால் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி அதனை மெய்யாக உணர்ந்து மயங்கிய வழித் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது; ‘கோடு ஆற்றப்பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முசுப்போல நாம் குறிபெறுங் காலத்து வாராது புள் தாமே வெறித்தியம்புந் துணையும் நீட்டித்துப் பின்பு வருதலின், குறி வாயாத் தப்பு அவன் மேலேற்றி, அதற்குத் தோள் பசந்தன வென்று பின் ஒருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி, இவ்வரவு மெய்யோ வெனவே தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தையும் பெற்றோம்; (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. மைபட்டன்ன மாமுக முசுக்கலை: “மைபட்டன்ன மாமுக முசுவினம்” (அகநா. 267:9.)

     மாமுக முசுக்கலை : முருகு. 303.

     3. தப்பல் : குறுந். 79:7, ஒப்பு.

     6. தோள் பசத்தல்: “கண்ணுந் தோளும்... பழநல மிழந்து பசலை பாய” (நற்.219:1-2); “வேய்புரை மென்றோட் பசலையும்” (கலி. 39:48)

     தடமென்றோள் : குறுந. 77:6, ஒப்பு.

     5-6. தலைவியின் துயரத்தைத் தோள் காட்டுதல் : குறுந். 77, வி-ரை.

     தலைவனது தவறு தோளின் தவறாதல் : “ தாம்பழி யுடையரல்லர் நாளும், நயந்தோர்ப் பிணித்த றேற்றா வயங்குவினை, வாளே ரெல்வளை நெகிழ்த்த, தோளே தோழி தவறுடை யவ்வே” (அகநா. 267: 14-7.)

(121)
  
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)
 122.    
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன 
    
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே 
    
வந்தன்று வாழியோ மாலை 
    
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே. 

என்பது தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.

ஓரம்போகியார் (பி-ம். ஓரம் போதியார்.)