பக்கம் எண் :


317


    3. உப்பொய் சகடம்: “ நோன்பகட் டுமண ரொழுகை” (சிறுபாண்.55); “பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச், சில்பத வுணவின் கொள்ளை சாற்றி” (பெரும்பாண். 63-4); “உப்பின் கொள்ளை சாற்றி, நெடுநெறி யொழுகை நிலவுமண னீந்தி” (நற். 183:2-3); “உப்பொயுமண ரருந்துறை போக்கும், ஒழுகை” (அகநா. 30:5-6); “உமணர், உப்பொயொழுகை” (புறநா. 116:7-8.)

    4. பெரும் பெயல் : குறுந். 13:2, 133:3, 168:3; முல்லை. 6.

    பெயல் தலைய: “தலைப்பெய றலைஇய” (முருகு. 9.)

    3-4. உப்பு மழையால் அழிதல்: “கடல்விளை யமுதம் பெயற் கேற்றாஅங், குருகி யுகுதல்” (நற். 88: 4-5); “உப்பியல் பாவை யுறையுற் றதுபோல, உக்கு விடுமென் னுயிர்” (கலி. 138: 16-7); “நெடுவெள்ளுப்பி னிரம்பாக் குப்பை பெரும்பெயற் குருகி யாஅங்கு”, “மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காம நண்ணி” (அகநா. 206: 14-5, 208:18-21); “உப்பின் பெருங்குப்பை நீர்படியினில் லாகும்” (திரி. 83); “கடும்புன னெருங்க வுடைந்துநிலை யாற்றா, உப்புச் சிறைபோ லுண்ணெகிழ்ந் துருகி” (பெருங். 3, 20:120-21); “ஒளிநலவுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோல்” (சீவக. 813.)

    5. இரும்பல் கூந்தல்: குறுந். 19:5, ஒப்பு; ஐங். 231:2, 281:3; அகநா. 142:18; புறநா. 120:17.

(165)
  
(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)
 166.   
தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை  
    
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்  
    
ஊரோ நன்றுமன் மரந்தை  
    
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.  

என்பது காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.

கூடலூர் கிழார்.

    (பி-ம்) 1.‘நிறைபோத்’, ‘நிரைபெயர்த்’, ‘நிரைபோத்’; 3.‘மாந்தை’, ‘மாநகை’.

    (ப-ரை.) தண் கடல் படு திரை பெயர்த்தலின் - குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால், வெள் பறை நாரை நிரை - வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, பெயர்ந்து அயிரை ஆரும் - நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய, ஊர் மரந்தை - ஊராகியமரந்தை, நன்றுமன் - தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; ஒரு தனி வைகின் -