1-2. தயிர் முதலியவற்றை ஆடையில் துடைத்துக்கொள்ளல்: “நெய்யுங் குய்யு மாடி மையொடு, மாசுபட்டன்றே கலிங்கமுந் தோளும்” (நற். 380:1-2.)
3-4. ‘கிளரிழை யரிவை நெய்துழந் தட்ட, விளரூ னம்புகை யெறிந்த நெற்றிச், சிறுநுண் பல்வியர் பொறித்த, குறுநடை” (நற். 41: 7-10.)
(167)
(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.) 168. | மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை |
| இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து |
| பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன |
| நறுந்தண் ணியளே நன்மா மேனி |
5 | புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள் |
| மணத்தலுந் தணத்தலு மிலமே |
| பிரியின் வாழ்த லதனினு மிலமே. |
என்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
(பொருள்வலிக்கும் - பொருள் தேடும் முயற்சியைத் துணியும்.)
சிறைக்குடி யாந்தையார். (பி-ம்) 2.‘பசுங்கொடைப்’; 3.‘பெரும்புலவர்’; 5.‘சாயிறையணைத் தோள்’;6.‘மணத்தொறும்’.
(ப-ரை.) நெஞ்சே, தலைவி, நல் மா மேனி - நல்ல மாமையையுடைய மேனி, மாரி பித்திகத்து - மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழு முகை - நீர் ஒழுகும்