பக்கம் எண் :


350


     கரி பொய்த்தல்: கலி. 34 : 10.

    அறிகரி: அகநா. 256: 28.

    2. குறுந். 206:5.

    சிறுகுடி: குறுந். 95:3, 100:3, 108:1, 145:1, 228:3; 284:8, 322:3,332:5, 355:6, 373:7.

    6. நுண்வலை: “நூனல நுண்வலை” (திணைமாலை. 32.)

    6-7. மடமகள் கண்வலை: ‘‘காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து, வீசின போதுள்ள மீனிழந்தார்’’ (திருச்சிற். 74.)

(184)
  
(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்!” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)
 185.   
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி 
    
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந் 
    
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச் 
    
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப் 
5   
பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக் 
    
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள் 
    
கன்மிசைக் கவியு நாடற்கென் 
    
நன்மா மேனி யழிபடர் நிலையே. 

என்பது தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து வேறுபட்டதலைமகளை, “வேறுபட்டாயால்” என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

    (என்றாட்கு - என்ற தோழிக்கு.)

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டன் (பி-ம். வேட்டன்,இளவேட்டனார்.)

    (பி-ம்.) 2. ‘நெகிழ்த்து’; 3. ‘னும் மிற்றாகுமென’; 8. ‘னமர் மேனி’.

    (ப-ரை.) தோழி -, பல் வரி பாம்பு - பல பத்திக்கீற்றுக்களையுடைய பாம்பினது, பை அவிந்ததுபோலகூம்பி - படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கொண்டலின்தொலைந்த - கீழ் காற்றால் வீழ்த்தப்பட்ட, ஒள் செ காந்தள் -ஒள்ளிய செவ்விய காந்தள் மலர், கல் மிசை - பாறையின்மேல், கவியும் - கவிந்து கிடக்கும், நாடற்கு - நாட்டையுடையதலைவனுக்கு, என் நல் மா மேனி - எனது நல்ல மாமையையுடைய மேனியினது, அழி படர் நிலை - மிக்க துயரை