ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன். (பி-ம்.) 3. ‘அதர்ப்பட்டு’; 4. ‘ஒழித்தன்றென்’. ‘தன்றே நாண்டகை’. ‘தன்றென் மாண்டகை’; 5. ‘மாமுடிப்’; 7. ‘காணலானே’.
(ப-ரை.) மயில் கண் அன்ன - மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாண்முடி பாவை - மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்வலைபரதவர் மடமகள் - நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண் வலை படூஉம் கானலான் - கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார்