பக்கம் எண் :


346


பெறாதவர் தாலப் புரவியு மாலையென்பும் .. இம்மைக்கு நாடி”(அம்பிகாபதி கோவை. 119.)

    மடலேறுவாரைப் பிறர் எள்ளுதல்: “வறிதாகப் பிறரென்னைநகுபவும்”, “காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்து” (கலி. 138:4, 139:20.)

    4. மடலேறுவார் நாணை நீக்குதல்: குறுந். 173:3, ஒப்பு.

    1-5. மடலேறித் தெருவில் வருதல்: குறுந். 17:1-3, ஒப்பு.

    6.(பி-ம்.) கலிழ்கவின்: மதுரைக். 413; ஐங். 106:4, 174:4;அகநா. 41:15, 96:12; பெருங். 2.5:170.

    அசைநடைப் பேதை: “அசையியற் கொடிச்சி” (குறுந். 214:3);“அசைநடைக் கொடிச்சியை” (ஐங்.258:2); “அசையியற்கு” (குறள். 1098)

(182)
  
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என்பதுபடத் தலைவி கூறியது.)
 183.   
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ 
    
நம்போற் பசக்குங் காலைத் தம்போற் 
    
சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட் 
    
டிரலை மானையுங் காண்பர்கொ னமரே 
5
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை 
    
மென்மயி லெருத்திற் றோன்றும் 
    
கான வைப்பிற் புன்புலத் தானே. 

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக்கிழத்தி யுரைத்தது.

ஒளவையார். (பி-ம். அவ்வையார்.)

    (பி-ம்.) 7. ‘கானக’, ‘புன்புல வைப்பிற் கானத் தானே’

    (ப-ரை.) தோழி-, புல் என் காயா பூ கெழு பெருசினை -மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை, மெல் மயில் எருத்தின்தோன்றும் - மழை பெய்தபின் மெல்லிய மயிலினதுகழுத்தைப் போலத் தோற்றும், கானம் வைப்பின் புல்புலத்தான் - காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண்,சென்ற நாட்ட - எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றை அம் பசுவீ - கொன்றையின்அழகிய செவ்வி மலர்கள், நம் போல் பசக்கும் காலை -