அகநானூற்று உரையாசிரியர். முல்லை யெயிறென முகைக்கு மென்றதுகார்ப்பருவம் வந்ததைப் புலப்படுத்தியது. ‘முகையும்’ என்னும் பாடமும்அரும்பும் என்னும் பொருளையுடையது; “முகைந்த தாமரை” (ஐங். 6:4.)என வருவதை இங்கே கருதுக. நாடற்குத் துயில் துறத்தலாவது, நாடனைச்சேராமையின் அவனை நினைந்து துயிலா திருத்தல்; நாடனால் துயில்துறந்தனவென உருபு மயக்க மாக்குதலும் ஆம்.
இஃது ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.
ஒப்புமைப் பகுதி 2. கொல்லைப் புனம் : “கொல்லை யிரும்புனத்து” (நாலடி. 178); “கொல்லைப் புனத்த வகில்” (ஐந். எழு. 2.)
1-2. கார், புனம், முல்லை : குறுந். 188:1-2.
2-3. முல்லை எயிறென முகைத்தல் : (குறுந். 126:3-4, ஒப்பு);“முல்லை யிலங்கெயி றீன” (கார். 14); “கார்கொடி முல்லை யெயிறீன”(ஐந். எழு. 21) “கார்செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை, கூரெயிறீன”,“முல்லை யெயிறீன” (கைந்நிலை, 25, 34.)
முல்லை முகைக்கும் : “பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா. 117:9.)
1-3. முல்லை கார்காலத்தில் அரும்புதல் : குறுந். 126:3-5, ஒப்பு.
3-4. தலைவன் பிரிவினால் கண் துயிலாமை : குறுந். 5:4-5, ஒப்பு.
(186)
(வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, அவன் மேற்குறையேற்றி உரையாடிய தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று தலைவி கூறியது.) 187. | செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி |
| சுரைபொழி தீம்பா லார மாந்திப் |
| பெருவரை நீழ லுகளு நாடன் |
| கல்லினும் வலியன் றோழி |
5 | வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே. |
என்பது வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கவேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்படமொழிந்தது.
கபிலர். (பி-ம்.) 1. ‘செல்வரை’, ‘செச்சை வருடை’; 4. ‘பல்லினும்’.
(ப-ரை.) தோழி-, செ வரை சேக்கை - செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய, வருடைமான்மறி - எண் கால் வருடையினது குட்டி, சுரைபொழி தீ