மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதன். (ப-ரை.) தோழி--, அல்கலும் - இரவுதோறும், தயங்குதிரை பொருத - விளங்கிய அலைகளால் மோதப்பட்ட,தாழை வெண் பூ - தாழையினது வெள்ளிய பூ, குருகு எனமலரும் - நாரையைப் போல மலர்தலைச் செய்வதற்குஇடமாகிய, பெருதுறை விரிநீர் சேர்ப்பனொடு - பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடையசேர்ப்பனோடு, நகா ஊங்கு - நகுவதற்கு முன்பு, பூவொடுபுரையும் கண்ணும் - தாமரை மலரை ஒத்த கண்களும்,வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் - மூங்கிலைப்போல வெற்றியை உடைய அழகைப் பெற்ற தோள்களும்,பிறை என மதி மயக்குறூஉம் நுதலும் - பிறை என்றுகருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும், நன்றும்நல்ல - மிகவும் நல்லனவாக இருந்தன; மன் - அந்நிலைஇப்பொழுது கழிந்தது!
(முடிபு)தோழி, சேர்ப்பனொடு நகாஅவூங்கு, கண்ணும் தோளும்நுதலும் நல்லமன்!
(கருத்து) தலைவனது பிரிவினால் என் மேனி நலம் அழிந்தது.