பக்கம் எண் :


424


     (வி-ரை.) பூவொடு: உருபு மயக்கம். விறல் வனப்பு - பிறர் தோள்வனப்போடு ஒப்பு நோக்குங்கால் தான் யாவற்றினும் விஞ்சி வெற்றி பெறும் வனப்பு.

   
“ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் 
   
 நண்ணாரு முட்குமென் பீடு”              (குறள், 1088.)  

என்பதனால் நுதல் மதியை மயக்குதல் பெறப்படும். தம் உறுப்புக்களைப்புகழ்ந்தது தற்புகழ்ச்சியாகாது, கழிந்ததற்கு இரங்கினமையின். தலைவன்மயங்கிய படியை அவன் தனது நலம் பாராட்டிய வழிக் கூறக் கேட்டுஉணர்ந்தவளாதலின் நுதல் மதி மயக்கும் என்று கூறினாள்.

    வாழி: அசை நிலை. தாழை வெண்பூ என்றாள் செந்தாழையைவிலக்குதற்கு.

    நகுதல் - அளவளாவுதல்; இஃது இடக்கரடக்கிக் கூறியது. ஏகாரம்ஈற்றசை.

    ஒப்புமைப் பகுதி 1. கண்ணிற்குப் பூ: குறுந். 72:1-5, ஒப்பு. 101:4,ஒப்பு.

    2. விறல் வனப்பு: “விறனலன்” (கலி. 3:5, 124:15.)

    1-2. தோளுக்கு வேய்: குறுந். 268:6,ஒப்பு.

    3. மதிமயக்குறூஉம் நுதல்: “மதிமருட்டுஞ் சிறுநுதல்” (யா.கா.4.)

    2-4. நுதலுக்குப் பிறை: குறுந். 129:3-5; நற். 250:7; 263:1;பெருங். 1. 36:265, 4. 11:68, 5. 6:11; சீவக. 165.

    4. நல்லமன்: குறுந். 357: 4.வாழி தோழி; குறுந். 260:4.

    1-4. கண், தோள், நுதல் பழைய அழகு கெடுதல்: “தோளேதொடிகொட் பானா கண்ணே, வாளீர் வடியின் வடிவிழந் தனவே, நுதலும் பசலைபா யின்று” (நற். 133:1-3.)

    5. தாழை திரையால் அலைக்கப்படுதல்: குறுந். 163:4.

    5-6. தாழைப் பூவிற்குக் குருகு: குறுந். 228:1-2; “நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று, கைதை மடற்புல்குதென்கழிப் பாலை யதினுறைவாய்” (தே.திருநா.); “அருகு கைதைமலரக்கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” (திவ். பெரிய. 5.2:9.)“தாழை குருகீனும்” (தொல். பொருள்.290, மேற்.)

     7. தலைவனொடு நகுதல்: குறுந். 169:3, 320:5, 381:7, 394:7; மதுரைக். 420; நற். 135:9, 187:10, 299:9.

    மு.குறுந். 357.

(226)
  
(அல்லகுறிப்பட்டு மறுநாள் வந்த தலைவன் மறைவில் இருப்ப,அவன் முதல் நாள் வந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)