பக்கம் எண் :


426


(தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியைநோக்கி, “நீஇதுகாறும் நன்றாக ஆற்றி இருந்தாய்!” என்று தோழி கூறிய பொழுது,“தலைவர் என் நெஞ்சிற்கு அணியராய் இருந்ததனாலும் அவர் நாட்டுத்திரை நம்மூர்க்கு வந்து பெயர்ந்ததனாலும் ஆற்றி இருந்தேன்” என்றுதலைவி கூறியது.)
 228.   
வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை 
    
குருகுள ரிறிகின் விரிபுதோ டவிழும் 
    
கான னண்ணிய சிறுகுடி முன்றிற் 
    
றிரைவந்து பெயரு மென்பநத் துறந்து 
5
நெடுஞ்சே ணாட்டா ராயினும் 
    
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. 

என்பது ‘கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்’ என்ற தோழிக்குக்கிழத்தி உரைத்தது.

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தான்.

    (பி-ம்.) 2. ‘குருகுளரிடத்தின்’, ‘குருகுகுளிரிடத்தின்’; 3. ‘கான நண்ணிய’, ‘குன்றிற்’; 6. ‘கணியரே’, ‘கணியரோ’, ‘கணியோர்’.

    (ப-ரை) தோழி-, நம் துறந்து - நம்மைப் பிரிந்துசென்று, நெடு சேண் நாட்டார் ஆயினும் - மிக்க சேய்மையில்உள்ள நாட்டில் இருப்பவராயினும், நெஞ்சிற்கு அணியர் -நெஞ்சிற்கு அணிமை இடத்துள்ளாரது, தண் கடல் நாட்டு -தண்ணிய கடலை உடைய நாட்டினிடத்து, வீழ் தாழ் தாழை -விழுது தாழ்ந்ததாழையினது, ஊழ் உறு கொழு முகை -முதிர்ந்த கொழுவிய அரும்பு, குருகு உளர் இறகின் - நாரைகள்கோதுகின்ற சிறகைப் போல, விரிபுதோடு அவிழும் - விரிந்துமடல்கள் மலர்கின்ற, கானல் நண்ணிய - கடற்கரைச் சோலையில் பொருந்திய, சிறுகுடி முன்றில் - சிற்றூரின் முன்னிடத்தில்,திரை வந்து பெயரும் - அலைகள் வந்து மீண்டு செல்லும்.

    (முடிபு)சிறுகுடி முன்றிலில் திரை வந்து அணியரது தண்கடனாட்டுப் பெயரும்.

    (கருத்து)தலைவன் என் நெஞ்சில் இருந்தமையின் ஆற்றி இருந்தேன்.

    (வி-ரை.)குருகுளரிடத்தின் என்ற பாடத்திற்குக் குருகுகள் கோதுகின்ற இடத்தில் எனப் பொருள் கொள்க. நத்துறந்து: குறுந். 174:4,

    (ப-ரை.) “தலைவர் நின்னை வரைந்து கொள்வதற்கு முன் அவர் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டினராகி இருப்பவும்நீ ஆற்றி இருந்தது நின் வன்மையைக் காட்டுகின்றது”