என்று தோழி தலைவியைப் புகழ, தலைவி, “அவர் நெடுந்தூரத்தில் இருந்தாராயினும் என் நெஞ்சிற்கு அணியராகஇருந்தார். அதனாலும் அவர் நாட்டிற்கும் எங்கள் ஊருக்கும்அலைகளின் தொடர்பு இருந்தமையாலும் ஆற்றி இருந்தேன்”என்றாள். தலைவனது நாட்டில் இருந்து வரும் நீரையேனும்பிற பொருளையேனும் கண்டும் கைக் கொண்டும் ஆற்றிஇருத்தல் தலைவியர் இயல்பு; இதனை இந்நூல் 361-ஆம்செய்யுளால் உணரலாம்.
(தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போன வழிஅவரைக் கண்டார், “இவர்கள் இளமையில் ஒருவரோடு ஒருவர் கலாம்விளைத்திருந்தனர். இப்பொழுதோ இணை பிரியாத துணைவர் ஆயினர்.ஊழின் வலிதான் என்னே!” எனத் தம்முள் கூறியது.)
229.
இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
5
நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகி ழியற்கை காட்டி யோயே.
என்பது இடைச் சுரத்துக் கண்டார், தம்முள்ளே சொல்லியது.