பாலை பாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 1. ‘ஒராஅவாழினும்’, ‘ஒரூஉவாழினும்’; 4. ‘நாணிட்டு’, ‘நாணட’, ‘நாணிட’.
(ப-ரை.) தோழி-, ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் -தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும்தெருவில் வாரார்; சேரி வரினும் ஆர முயங்கார்- இத்தெருவில்வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்; நாண் அட்டு -நாணத்தை அழித்து, நல் அறிவு இழந்த காமம் - தக்கதிதுதகாததிது என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும்காமமானது, வில் உமிழ் கணையின் - வில்லால் எய்யப்பட்டஅம்பைப் போல, சென்று சேண்பட - போய் நெடுந்தூரத்தில்அழியும்படி, ஏதிலாளர் சுடலைபோல - அயலாருடையசுடுகாட்டைப் போல, காணா - நம்மைக் கண்டும்வேறொன்றும் புரியாமல், கழிப - செல்லுவார்.