மாயெண்டன். (பி-ம்.) 1. ‘வாழிய’; 2. ‘தூங்குவெள்’; 3. ‘கல்லுயரண்ணி யதுவே’.
(ப-ரை.)வாடை - வாடைக் காற்றே, நெல்லி - நெல்லிக்காயை, மரை இனம் ஆரும் முன்றில் - மரையின் திரள்உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய, புல் வேய் குரம்பை -புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய, நல்லோள்ஊர் - நல்ல தலைவியினது ஊரானது, பாம்பின் தூங்குதோல் கடுக்கும் - பாம்பின் நாலுகின்ற உரியை ஒக்கும்,தூ வெள் அருவி - தூய வெள்ளிய அருவியை உடைய,கல் உயர் நண்ணியது - மலையின் உயரத்திலே பொருந்தியது;