உலோச்சன். (பி-ம்.) 1. ‘அதுவர வன்மையோ’; 2. ‘பிறுக’; 5. ‘அடம்பிவர் பமன்ற கொடுயர்’, ‘டூர்நெடும் பெண்ணை’; 7. ‘பெறிய’.
(ப-ரை.) தோழி--, கானல் ஆடு அரை புதைய - கடற்கரைச் சோலையின் இடத்திலுள்ள அசைந்த அடியிடம் புதையும்படி, கோடை இட்ட - மேல்காற்றுக் கொணர்ந்து இட்ட, அடும்பு இவர் மணல் கோடு ஊர - அடும்பங் கொடி படர்ந்த மணற் குவியல் பரவ, நெடுபனை - நெடிய பனை மரங்கள், குறிய ஆகும் - குறியனவாகும், துறைவனை - கடற்றுறையை உடைய தலைவனை, பெரிய கூறி - முருகன் என்று சொல்லி வெறியெடுத்து, யாய் அறிந்தனள் - நம் தாய் அறிந்து கொண்டாள்; ஆதலின், அதுவரல் அன்மை