529
மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு; “பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் என்னிளங் கொங்கை யமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினே னெல்லே பாவமே” (பெரியாழ். 3.2:8.) நிறை - நிறைந்த கருப்பம். ஒதுங்கல் - நடத்தல். வயாநோயுடையார் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்பு; பசும்புளி - பச்சைப் புளியங்காய்; “நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே” (ஐங். 51.) கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர் (மதுரைக். 609, ந.) ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு. 4. வயாநோயுற்றார் புளியை விரும்புதல்: “வயாவுநோய் நிலையாது, வளைகாய் விட்ட புளியருந் தாது” (கல். 7:5-6); “பொய்த் துயில் கொண்டு புளிக்கு முவந்தாள்” (பிரபு. மாயை உற்பத்தி. 27.) 5. கடுஞ்சூல்: சிறுபாண். 148; பெரும்பாண். 395; கலி. 110:14. (287) தலைவி கூற்று (தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.) 288. கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினு மினிதோ 5. இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. ் என்பது தலைமகனது வரவு உணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலன் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. (கிழத்தி உணர்ந்து தோழிக்கு உரைத்ததென்க.) கபிலர். (பி-ம்.) 2. ‘கிகுக்கும்;’ 3. ‘னினத்தியன்ற.’ (ப-ரை.) தோழி - கறி வளர் அடுக்கத்து ஆங்கண் - மிளகு கொடி வளர்கின்ற மலைப் பக்கமாகிய அவ்விடத்தே, முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் - தளிரை உண்ணுகின்ற
மகளிர் பன்னிரண்டு திங்கள் கருவுற்றிருத்தலும் உண்டு;
“பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் என்னிளங் கொங்கை யமுத மூட்டி யெடுத்து யான் பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின்பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினே னெல்லே பாவமே” (பெரியாழ். 3.2:8.)
நிறை - நிறைந்த கருப்பம். ஒதுங்கல் - நடத்தல்.
வயாநோயுடையார் புளித்த சுவையை உடைய பொருள்களை விரும்புதல் இயல்பு; பசும்புளி - பச்சைப் புளியங்காய்;
“நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்றுநின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே” (ஐங். 51.)
கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர் (மதுரைக். 609, ந.)
ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
4. வயாநோயுற்றார் புளியை விரும்புதல்: “வயாவுநோய் நிலையாது, வளைகாய் விட்ட புளியருந் தாது” (கல். 7:5-6); “பொய்த் துயில் கொண்டு புளிக்கு முவந்தாள்” (பிரபு. மாயை உற்பத்தி. 27.)
5. கடுஞ்சூல்: சிறுபாண். 148; பெரும்பாண். 395; கலி. 110:14.
288. கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினு மினிதோ 5. இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. ்
என்பது தலைமகனது வரவு உணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலன் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
(கிழத்தி உணர்ந்து தோழிக்கு உரைத்ததென்க.)
(பி-ம்.) 2. ‘கிகுக்கும்;’ 3. ‘னினத்தியன்ற.’
(ப-ரை.) தோழி - கறி வளர் அடுக்கத்து ஆங்கண் - மிளகு கொடி வளர்கின்ற மலைப் பக்கமாகிய அவ்விடத்தே, முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் - தளிரை உண்ணுகின்ற