காமம் தாங்க மாட்டாமை: “பொறைநில்லா நோய்”
(கலி. 3:4.) 6. இல்லாகுதும்: “நாமில மாகுத லறிதும்” (நற். 299:6.)
5-6. மெல்ல மெல்ல அழிதல்: “ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய, தேய்புரிப் பழங்காயிறு போல, வீவது கொல்லென் வருந்திய வுடம்பே” (நற். 284:9-11.)
மு. குறுந். 152.
(290)
(தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.) 291. | சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் |
| படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே |
| இசையி னிசையா வின்பா ணித்தே |
| கிளியவள் விளியென வெழலொல் லாவே |
5 | அதுபுலந் தழுத கண்ணே சாரற் |
| குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை |
| வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் |
| தண்டுளிக் கேற்ற மலர்போன் றனவே. |
என்பது பாங்கற்கு உரைத்தது.
கபிலர். (பி-ம்.) 1. ‘சுடும்புன மருங்கிற’்; 3. ‘இசைஇ யின்னிசையாய்’,‘விழவொல்லாவே’; 7. ‘பல்லிதழ்க் கலைஇய’; 8. ‘மலர் போன்றவ்வே’.