கணக்காயன் தத்தன். (பி-ம்.) 1. ‘தொல்வினைப்’; 2. ‘முனிவெதிர்’; 3. ‘தாங்கருவாய் நீர்’.
(ப-ரை.) தோழி, கொல் வினை பொலிந்த - கொல்லுந்தொழிலிற் பொலிவு பெற்ற, கூர்வாய் - கூரிய முகத்தையுடைய, எறி உளி - எறிகின்ற உளியை, முகம் படமடுத்த -தன்னுடைய முகத்தின்கண் அமையும்படி பொருத்தப்பெற்ற, முளி வெதிர் நோன் காழ் - உலர்ந்த மூங்கிலின்வலிய காம்பை, தாங்கு அருநீர் சுரத்து எறிந்து - தாங்குதற்கரிய நீரையுடைய வழியின்கண் எறிந்து, வாங்கு - கைக்கொள்ளும், விசை கொடு திமில் பரதவர் - வேகத்தையுடையவளைந்த மீன் படகையுடைய பரதவர், கோடு மீன் எறிய -கொம்பையுடைய சுறா மீனை எறிய, நெடு கரை இருந்த -நெடிய கரையினிடத்தே இருந்த, குறு கால் அன்னத்துவெள் தோடு - குறிய கால்களையுடைய அன்னப்பறவைகளின் வெள்ளிய தொகுதி, இரியும் - கெட்டு ஓடும், வீததைகானல் - மலர்கள் நெருங்கிய சோலையையும், கைதை -தாழையையும், அம் தண் புனல் - அழகிய தண்ணிய