பக்கம் எண் :


554


     (கருத்து) தலைவனை நான் நினைந்திருத்தலையன்றி, அவன்வந்தானல்லன்.

     (வி-ரை.) ‘தலைவனைப் பிரிந்திருக்கும் கொடுமையை ஆற்றோம்;ஆற்றாது ஈண்டிருத்தலினும் இறந்துபடுதல் நன்றெனினோ, அதுவும்அஞ்சுதற் குரியது. ஊரினர் அலர் கூறுதற்கு அஞ்சித் தலைவன்வந்திலனோ? அங்ஙனம் கூறப்படும் அலர்தான் என் உயிர் செல்லாமற்காப்பதும் அவனுக்கு உரிமையாக்குவதுமாதலின் அதற்கு அஞ்சுதல்உயர்வன்று’ என்று தலைவி கூறினாள்.

     இறத்தற்கு அஞ்சினள் ‘அவன் வாராதொழியான்’ என்ற துணிவினால்; “வாரா தொழியா னெனும்வண் மையினால், ஓரா யிரகோ டியிடர்க் குடையேன்” (கம்ப. உருக்காட்டு. 6.) அலர் தம்மிடையே உள்ள நட்பை உறுதிப் படுத்துவதாக இருப்ப, அதற்கு அஞ்சுதல் முரணாதலின் புரைத்தோ வன்றே யென்றாள்.

     மேற்கோளாட்சி மு. வரைவிடைக் கவன்ற தோழிக்குத் தலைவி கூறியது (தொல். களவு. 21. ந. மேற்.)

     ஒப்புமைப் பகுதி மு. “உரைத்திசிற்.. .. .. .. .. உயிரே” (தொல். களவு. 12, ந. மேற்.)

     2. அதன்றலை: குறுந். 366:3.

     3. பெரும்பிறிது: குறுந். 69:1, ஒப்பு.

     7. ஊரினர் யாமத்தில் துஞ்சுதல்: குறுந். 28: 5, 32:2, ஒப்பு. கலி. 65.3.

     துஞ்சூர் யாமம்: ஐங். 13:4; அகநா. 198:11, 360:12.

     7-8. தலைவன் தலைவியின் நெஞ்சத்து வருதல்: “தந்நெஞ்சத்தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல், எந்நெஞ்சத் தோவா வரல்”(குறள், 1205.)

(302)
  
(“தலைவி வேறுபாடு மிக்கனள்; ஆதலின் தாய் இற்செறிக்கக்கருதினாள்; இனி இவளை மணந்துகோடலே தக்கது” என்று தோழிதலைவனுக்கு உரைத்தது.)
 303.    
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு 
    
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் 
    
உடைதிரை யொலியிற் றுஞ்சுந் துறைவ 
    
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் 
5    
பசந்தனண் மன்னென் றோழி யென்னொடு 
    
மின்னிணர்ப் புன்னையம் புகர் நிழற் 
    
பொன்வரி யலவ னாட்டிய ஞான்றே. 

என்பது செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

அம்மூவன்.

     (பி-ம்.) 1. ‘குறுங்கால்; 2. ‘ளிங்குப்’.