பக்கம் எண் :


567


     எல்லை: பகல், சூரியன்; குறுந். 355:3, 387:1; குறிஞ்சிப். 215.

     புல்லென்றல்; குறுந். 19:2, ஒப்பு.

     2-4. “அமரக மருங்கிற் கணவனை யிழந்து, தமரகம் புகூஉ மொருமகள் போலக், கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ, டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி, வந்திறுத்தனளான் மாநகர் மருங்கென்” (மணி. 5:137-41.)

     6. தண்ணிய கமழும்: குறுந். 273:3.

     5-7. (குறுந். 98:1-3); “வரைப் பான் மதுரைத் தமிழ்தெரி வாணன்றென் மாறைவையை, நுரைப்பான் முகந்தன்ன நுண்டுகி லாயிந்த நோயவர்க்கின், றுரைப்பாருளரே லுயிரெய்த லாநமக் கூர்திரைசூழ், தரைப்பால் வளரும் புகழெய்த லாமவர் தங்களுக்கே” (தஞ்சை. 217.)

(310)
  
(“இரவில் தலைவன் ஈண்டு வந்து செல்வதை ஆயத்தார் யாவரும்அறிந்தனர்; அதனால் அலர் பெருகியது” என்று தலைவி, தலைவன்சிறைப்புறத்தில் இருப்பத் தோழிக்குச் சொல்லியது.)
 311.    
அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்  
    
புலவுநா றகன்றுறை வலவன் றாங்கவும்  
    
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்  
    
யான்கண் டன்னோ விலனோ பானாள்  
5
ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத்  
    
தாதுசேர் நிகர்மலர் கொய்யும் 
    
ஆய மெல்லா முடன்கண் டன்றே.  

என்பது அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப் புறத்தானாகத்தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

    (பி-ம். சொற்றது.)

சேந்தன்கீரன்.

     (பி-ம்.) 1. ‘அலர்யாங் கொல்வ’; 4. ‘கண்டன்றோவிலனே’.

     (ப-ரை.) தோழி--, பெரு கடல் - பெரிய கடலினது,புலவு நாறு அகல் துறை - புலால் நாற்றம் வீசும் அகன்றதுறையின் கண்ணே, வலவன் தாங்கவும் - பாகன் தடுக்கவும்,நில்லாது கழிந்த - நில்லாமற் சென்ற, கல் என் கடு தேர் -கல்லென ஆரவாரம் செய்யும் விரைந்த தலைவனது தேரை,யான் கண்டனனோ இலனோ - யான் கண்டேனோ இல்லையோ, பால் நாள் - நடு இரவின் கண், ஓங்கல் வெள்மணல் தாழ்ந்த புன்னை - உயர்ச்சியையுடைய வெள்ளியமணலினிடத்துத் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தினது,தாது சேர் நிகர் மலர்கொய்யும் - மகரந்தம் சேர்ந்த ஒளியை