பேயார். (பி-ம்.) 1. ‘னறும்புகை’ 2. ‘உறையுறு மகளிர் மையிற்’ 5. ‘நறுவிதழ்க்’, ‘நறுமாயிதழ்க்’.
(ப-ரை.) தோழி--, நறை அகில் - வாசனையையுடையஅகிலினது, வயங்கிய நளி புனம் நறுபுகை - விளங்கியசெறிந்த புனத்தின்கண் எழுந்த நறிய புகையானது, உறைஅறுமையின் போகி - துளிகள் அற்ற வெண்மேகத்தைப்போலச் சென்று, சாரல் குறவர் பாக்கத்து - மலைச்சாரலிலுள்ளகுறவர்களுடைய ஊரில், இழி தரும் நாடன் - இறங்கும்நாட்டையுடைய தலைவன், மயங்கு மலர் கோதை - பலவகை மலர்கள் கலந்த மாலையையணிந்த, நல் மார்புமுயங்கல் - நின் நல்ல மார்பைத் தழுவுதல், மா இதழ் -