பக்கம் எண் :


615


    தாழை கழியில் ஓதம் மிகும்பொழுது உயர்ந்தும் தாழ்ந்த பொழுது தாழ்ந்தும் அலைதலைப் போல என் நெஞ்சு காமம் மிக்கபொழுது அவர்பாற் படர்ந்தும், மிகாதபொழுது அவர்க்கு வரும் ஏதம் நினைந்து வருந்தியும் கலங்குவதாயிற்றென உவமையை விரித்துக் கொள்க.

     என் நெஞ்சு ஒருபாற் படாது வருந்துமென்றமையால் இரவுக்குறி மறுத்தாளாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 3. ஆயிடை: குறுந். 43:3.

    7. தலைவன் தலைவியின் நெஞ்சத்து இருத்தல்: குறுந். 36:3, ஒப்பு.

(340)
  
(தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்த காலத்து வருந்துவாளெனக் கவன்ற தோழிக்கு, “அவர் தம் காரியத்தை முற்ற முடித்தபின் வருவரென்று துணிந்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.)
 341.   
பல்வீ பட்ட பசுநனைக் குரவம் 
    
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச் 
    
சினையினி தாகிய காலையுங் காதலர் 
    
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக் 
5
கண்ணிய வாண்மை கடவ தன்றென 
    
வலியா நெஞ்சம் வலிப்ப 
    
வாழ்வேன் றோழியென் வன்க ணானே. 

என்பது பருவவரவின்கண் வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

மிளைகிழான் நல்வேட்டன்.

     (பி-ம்.) 1. ‘பல்லி பயந்த’, ‘பல்லி படீஇய’, ‘பல்லி படரிய’ 5. ‘கண்ணிய லாண்மை’ 6. ‘வலிய’.

    (ப-ரை.) தோழி--, பல் வீ பட்ட பசு நனை குரவம் - பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம், பொரி பூ புன்கொடு - நெற்பொரியைப் போன்றபூக்களையுடைய புன்க மரத்தோடு, பொழில் அணிக்கொளாஅ - சோலையின் கண் அழகைக் கொண்டு, சினைஇனிது ஆகிய - கிளை கண்ணுக்கு இனிதாகத் தோற்றிய,காலையும் - இப்பருவத்திலும், காதலர் பேணார் ஆயினும் -தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவாராயினும், பெரியோர்நெஞ்சத்து கண்ணிய ஆண்மை கடவது அன்று என - பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த மேற்கோள் செலுத்தப்படுவதன் றென்றெண்ணி, வலியாநெஞ்சம் - முன்னர்த்