பிடியை நயந்த களிறு குன்றம் நண்ணுமென்றது நின்னை நயந்ததலைவன் ஊராரலருக்கு அஞ்சி மனையகத்தே இரவில் வருவானென்றகுறிப்பை உணர்த்தியது.
நல்லகம் என்றலின் அவன் நயந்தது நன்மையையே பயக்குமென்றதன் உடம்பாட்டை உணர்த்தினாள்; இதனால் தலைவியைத் தோழிஇரவுக்குறி நயப்பித்தாளாயிற்று.
(மேற்கோளாட்சி) மு. தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது (தொல்.களவு. 23, ந.)
ஒப்புமைப் பகுதி 3. மன்றம் போழ்தல்: குறுந். 301:5.
4. சுனைப்பூங்குவளை: குறுந். 59:2-3, ஒப்பு, 321:2.
5. தலைவன் தலைவியொடு கிள்ளையோப்புதல்: "பைந்தாட்செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், செந்தார்க் கிள்ளை நம்மொடுகடிந்தோன்", "களிறணந் தெய்தாக் கன்முகை யிதணத்துச், சிறுதினைப்படுகிளி யெம்மோ டோப்பி" (அகநா. 242:5-6, 308:9-10.)
4-5. சுனைப்பூவினால் தொடலை கட்டுதலும் கிளியோப்புதலும்:குறுந். 142: 1-2. 8. தலைவன் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமை: குறுந். 298:2; கலி. 37:1-5; திருச்சிற். 82, 83.
(346)
(பொருள்வயிற் பிரிய எண்ணிய தன் நெஞ்சத்தை நோக்கி,"தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித்தலைவன் செலவு தவிர்ந்தது.) 347. | மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற் |
| குமரி வாகைக் கோலுடை நறுவீ |
| மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் |
| கான நீளிடைத் தானு நம்மொ |
5 | டொன்றுமணஞ் செய்தன ளிவளெனின் |
| நன்றே நெஞ்ச நயந்தநின் றுணிவே. |
என்பது பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்செலவழுங்கியது.
(பொருள் வலிக்கும் நெஞ்சு - பொருள் பெறவேண்டுமென்று எண்ணி அதன்பொருட்டுத் தவைவியைப் பிரிந்து செல்ல எண்ணிய நெஞ்சு. செலவு அழுங்கியது - செல்லுதலைத் தவிர்ந்தது; இங்ஙனம் அழுங்குதல் தலைவியை ஆற்றுவித்துப் பின்னர்ச் செல்லும் பொருட்டேயாகும்.)
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணன். (பி-ம்.) 1. ‘மல்குசுனைப் புலந்த’ 2. ‘கொல்லுடை நறுவீ’.
(ப-ரை.) (ப-ரை.) நெஞ்சம் - நெஞ்சே, மல்கு சுனை புலர்ந்தநல்கூர் சுரமுதல் - முன்பு நீர் மல்கிய சுனை பின்பு