சாத்தன். (பி-ம்.) 1. ‘அரும்பவி’, ‘சிதையமீன்’ 6. ‘தரவெனச்’, ‘தாவெனக் கூறலின்’, ‘சொல்லலும’், ‘சொல்லினும்’ 7. ‘மின்னுயிரிழவே’.
(ப-ரை.) தோழி--, அடும்பு அவிழ் அணி மலர் - அடும்பின் கொடியினிடத்தே மலர்ந்த அழகிய மலரை,சிதைஇ - சிதைத்து, மீன் அருந்தும் தட தாள் நாரை - மீனை உண்ணுகின்ற வளைந்த காலையுடைய நாரை,இருக்கும் எக்கர் - தங்கியிருக்கின்ற மணல் மேட்டையுடைய,தண்ணந்துறைவன் தொடுத்து - தண்ணிய துறையையுடையதலைவனை வளைத்து, நம் நலம் கொள்வாம் என்றி - நாம் இழந்த பெண்மை நலத்தைப் பெறுவேமென்று கூறுகின்றாய், கொள்வாம் - அங்ஙனமே கொள்வேம், ஆயினும்இடுக்கண் அஞ்சி - தாம் உற்ற வறுமைத் துன்பத்துக்குஅஞ்சி, இரந்தோர் வேண்டிய - யாசிப்பவர் விரும்பி இரந்தவற்றை, கொடுத்து அவை தா என் சொல்லினும் - கொடுத்துப்பிறகு அங்ஙனம் கொடுத்த அவற்றைத் தருக என்று சொல்லுதலைக் காட்டிலும், நம் இன் உயிர் இழப்பு - நமது இனியஉயிரை இழத்தல், இன்னாதோ - இன்னாமையையுடையதோ? அன்று; ஆதலின் அது கருதிலேன்.
(முடிபு) தோழி, துறைவற்றொடுத்து நலம் கொள்வா மென்றி;கொள்வாம்; கொடுத்தவை தாவென் சொல்லினும் நம் இன்னுயிரிழப்புஇன்னாதோ?