அம்மூவன். (பி-ம்.) 1. ‘வளையோய் வந்திசின்’, ‘விரவுங் கொடுந்தாள்’ 3. ‘ஈர்மண லீர்நெறி’ 4-5. ‘துறைவற்குரிய’ 6-7. ‘சேரியினகை யாய்த்தாயத்தாரே’.
(ப-ரை.) வளையோய் - வளையை அணிந்தோய்,நமர் - நம் சுற்றத்தார், விரைவு உறு கொடு தாள் அளைவாழ் அலவன் - விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு, கூர்உகிர் வரித்த - தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈர் மணல் மலிர்நெறி சிதைய - ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி,இழுமென - இழுமென்னும் ஓசையுண்டாக, உரும் இசைபுணரி உடைதரும் துறைவர்க்கு - இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு,