பக்கம் எண் :


633


    1-4. வௌவால் மாலையில் தாம் இருந்த மரத்தை நீங்கி வேறிடம்செல்லுதல்:

  
“பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன, ... மாச்சிறைப்  
  
 பறவை, பகலுறை முதுமரம் புலம்பப் போகி”         (அகநா. 244:1-3).  

    1-5. குறுந். 172:1-2, ஒப்பு.

    5-6. தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி மாலைக் காலத்தைஅறிதல்: (குறுந். 386:2-4); “மாலைநோய் செய்தன் மணந்தாரகலாத,காலை யறிந்த திலேன்” (குறள். 1226)

(352)
  
(பகற்குறி வந்தொழுகும் தலைவன், தலைவி இல்லினின்றும் வெளிப்போதலால் ஊரினர் அறிவரோவென அஞ்சி இரவுக்குறி விரும்பிச்சிறைப்புறத்தே நிற்பத் தலைவியை நோக்கிக் கூறுவாளாய், “நம் அன்னையின் காவல் இரவில் மிக்கது” என்று தோழி இரவுக்குறி மறுக்கும் வாயிலாக வரைவு கடாயது).
 353.   
ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக்  
    
கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே 
    
பாடின் னருவி யாடுத லினிதே 
    
நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் 
5
பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற்  
    
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ 
    
அன்னை முயங்கத் துயிலின் னாதே. 

என்பது பகற்குறி வந்து ஒழுகும் தலைமகன் வெளிப் பாடஞ்சி இரவுக்குறிநயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின் கண் அன்னையது காவலறிந்துபின்னும் பகற்குறியே நன்று அவ்விரவுக் குறியினென்று பகற்குறியும்இரவுக்குறியும் மறுத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.

உறையூர் முதுகூற்றன்.

     (பி-ம்.) 4. ‘நிறையிதழ்‘

     (ப-ரை.) பகல் - பகற் காலத்தில், கோடு உயர் நெடு வரை கவான் - கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினதுதாழ்வரையினிடத்தே, பாடு இன் அருவி - ஓசை இனிதாகியஅருவியில், ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக - நிறைந்தமுழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்புதெப்பமாக, ஆடுதல் இனிது - நீர்விளையாடல் இனிய,இரவில் - இராக்காலத்தில், பஞ்சி வெள் திரி செ சுடர் நல்இல் - பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்வியவிளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே, அன்னை - நம் தாய், பின்னு வீழ் சிறு புறம் தழீஇ - பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி, முயங்க - அணைப்ப, நிரை