பக்கம் எண் :


643


     (வி-ரை.) பேதுற ஆய் கோடிட்டென்னும் பாடத்திற்குக் கண் மயங்கும்படி ஆராயும் கோடுகளை இட்டெனப் பொருள் கொள்க. தலைவர் வரும்நாளைச் சுவரிற் கோடிட்டுப் கணக்குப் பார்த்தல் மகளிர் இயல்பு;

  
“வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற  
  
 நாளொற்றித் தேய்ந்த விரல்”            (குறள். 1261) 

மாலையில் கோவலர் தம் வீட்டிற்குத் திரும்பி வருகையில் முல்லையைக்கண்ணியாகக் கட்டி அணிந்து வந்தனர் (குறுந். 221:4-5)

     ஒப்புமைப் பகுதி 1. இழைநெகிழ்தல்: குறுந். 188:3, ஒப்பு.

     2-3. மகளிர் சுவரிற் கோடிட்டு நாட்கணக்குப் பார்த்தல்: “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல் வாழி தோழி”, “சேணுறை புலம்பி னாண்முறை யிழைத்த, திண்சுவர் நோக்கி நினைந்து” (அகநா. 61:4-5, 289:9-10); “மெல்விரலின், நாள்வைத்து நங்குற்ற மெண்ணுங் கொல்” (நாலடி. 394)

     4. உதுக்காண்: குறுந். 81:4, ஒப்பு. 191:1, ஒப்பு.

     6. பல்லான் கோவலர்: “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்” (பதிற். 21:20).

     6-7. முல்லை மலர்ந்து கார்காலத்தைத் தெரிவித்தல்: குறுந். 126:3-5. ஒப்பு.

(358)
  
(வாயில் பெறாத தலைமகன் மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத்தானே புக்குப் பாயலிற் புதல்வனைத் தழுவிக் கொண்ட காலத்தில் தலைவி ஊடல்தணிந்ததைத் தோழி பாணனுக்குக் கூறியது.)
 396.    
கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம  
    
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்  
    
குறுங்காற் கட்டி னறும்பூஞ் சேக்கைப்  
    
பள்ளி யானையி னுயிர்த்தன னசையிற்  
5
புதல்வற் றழீஇயினன் விறலவன்  
    
புதல்வன் றாயவன் புறங்கவைஇ யினளே.  

என்பது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது தானேபுக்குக் கூடியது கண்டு தோழி பாணற்குச் சொல்லியது.

பேயன்.

     (பி-ம்.) 4. ‘னுயிரா வசைஇப்’ 6. ‘புதல்வற் புல்லின்’.

     (ப-ரை.) பாண--, விறலவன் - வெற்றியையுடையதலைவன், மாலை விரிந்த பசு வெள் நிலவில் - மாலைக்காலத்திலே விரிந்த இளைய வெள்ளிய நிலாவொளியில்,குறுகால் கட்டில் நறு பூ சேக்கை - குறிய கால்களையுடையகட்டிலினிடத்தேயுள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில்,