உறையூர் முதுகூற்றன். (ப-ரை.) தோழி--, மை படு சிலம்பின் - மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில், ஐவனம் வித்தி - மலைநெல்லை விதைத்து, அருவியின் விளைக்கும் நாடனொடு - அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால், கைவளை நெகிழ்தலும் - என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும், மெய் பசப்பு ஊர்தலும் - மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும், மருவேன் - பெறேன்;ஆயினும், அது காமம் - அக்காமம், பெரிது--,