(முடிபு) தோழி, நாடனொடு வளை நெகிழ்தலும் பசப்பூர்தலும் மருவேன்; காமம் பெரிது.
(கருத்து) காமம் என்வரைத்தன்றி மிக்கது.
(வி-ரை.) தலைவி தலைவனது பிரிவினால் மெலிந்தாள்; அதனால் வளை நெகிழ்ந்தது; மெய்யிற் பசலை உண்டாயிற்று. அதுகண்ட தோழி,"நீ இங்ஙனம் ஆற்றாயாதல் தக்கதன்று. அவர் நின்பொருட்டன்றேபிரிந்தனர்?” என்றாள். அப்பொழுது, “இவ்வேறுபாடு தலைவனால்உண்டாகவில்லை. எனக்கும் இவ்வேறுபாடு கொள்ளல் கருத்தன்று.ஆயினும் காமம் பெரிதாகலின் என்னளவில் நில்லாது இவை உண்டாகக்காரணமாயிற்று” என்று தலைவி கூறினாள்.
மைபடு சிலம்பு - மேகங்கள் தாழ்ந்து மழை பெய்யும் மலை.மை படுவதை நோக்கி ஐவனம் வித்தினர்; பின்னர் மழை பொழியஅதனால் அருவி உண்டாக அதன் நீரால் ஐவனம் விளைந்தது. மேகம்பொழியுமென்னும் உறுதி பற்றி ஐவனத்தை வித்திப்பின்னர் விளைக்கும்நாடனென்றது, பின்னர் நலம் உண்டாகுமென்னும் உறுதிபற்றி இக்காமம்உண்டாயிற்றென்ற குறிப்பினது. நாடனொடு: ஒடுவுருபு ஆலுருபின்பொருளில் வந்தது. அது காமமென்றதில் அதுவென்றது அகரச்சுட்டின்பயத்ததாய் நின்றது.
காமமோ: ஓ அசைநிலை. பெரிதே: ஏ அசைநிலை; தேற்றமுமாம்.
ஒப்புமைப் பகுதி 1. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு. மெய் பசத்தல்: ஐங். 29:5, 41:3-4, 217:4. 2. மைபடு சிலம்பு: கலித். 43:6.
2-3. ஐவனம் வித்தி அருவியினால் விளைத்தல்: குறுந். 100:1, ஒப்பு.
4. காமம் பெரிது: குறுந். 18:5, ஒப்பு.
(371)
(இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைவன் சிறைப்புறத்தானாக,தலைவிக்குக் கூறுவாளாய், “இவ்வூரில் அலர் பெருகியது” என்றுதோழி வரைவின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.) 372. | பனைத்தலைக், கருக்குடை நெடுமடல் குருத்தொடு மாயக் |
| கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக் |
| கணங்கொள் சிமைய வணங்குங் கானல் |
| ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக் |
5 | கூழைபெ யெக்கர்க் குழீஇய பதுக்கை |
| புலர்பதங் கொள்ளா வளவை |
| அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே. |
என்பது இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்பத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.