பக்கம் எண் :


670


கண்களின் மாட்சிமைப்பட்ட அழகு நீங்க, வளை ஏர் மெல்தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் - வளையையுடைய அழகியமெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும், மாற்று ஆகின்று - பரிகாரமாக ஆகின்றது; அது கருதி யான் ஆற்றா நிற்பவும்,ஆற்றலை - நீ ஆற்றினாயல்லை.

     (முடிபு) தோழி, நட்பு மாற்று ஆகின்று; ஆற்றலை,

     (கருத்து) தலைவனது இயல்பை உணர்ந்து யான் ஆற்றினேன்.

     (வி-ரை.) தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி யினது வேறுபாடு கண்ட தோழி, “நின் அழகிய கண்கள் இயல்பழிந்தன.நின் தோள்கள் ஞெகிழ்ந்தன; இனி என் செய்வோம்!” என்று கவன்றவிடத்துத் தலைவி கூறியது இது.

    மலரேருண்கண், மென்றோ ளென்பன பட்டாங்கு கூறினவாதலின் தற்புகழ்ச்சியாகா. தலையும்: உம்மை இழிவுசிறப்பு.

    மாற்று - பரிகாரம்; “மாற்றருங் கூற்றம்” (தொல். புறத்.24.)

    தலைவனை அறிதற்கமையா நாடனென்றது அவனது நல்லியல்பைநீ அறிந்தாயல்லை யென்னும் நினைவிற்று. சில நாட்களிலே அமைந்தமையின் சிறுநட்பென்றும், நன்மை பயப்பதாதலின் நன்னட்பென்றும்கூறினாள்.

    என் உடல் மெலியவும் அவனது நட்பு எனக்குப் பரிகாரமாகின்றதென்ற இக்கருத்து,

  
“குன்ற நாடன் கேண்மை 
  
 மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே”     (குறுந். 90:6-7) 

என முன்னும் வேற்றுருவத்தில் வந்தது.

     ஆற்றலையே: ஏ இரங்கற்பொருட்டு.

     ஒப்புமைப் பகுதி 1. மலரேருண்கண்: குறுந். 101:4,ஒப்பு.; நற். 325:7. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு. 4. அறிதற்கமையா நாடன்: “அவர்வயிற்,சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ” (குறுந். 366:1-2.)

(377)
  
(தலைவனுடன் தலைவி சென்றதை அறிந்த செவிலித்தாய், “என்மகள் போனவழி இன்பத்தைத் தருவதாக அமைக” என்று தெய்வத்தை வாழ்த்தியது).
 378.    
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு  
    
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் 
    
தண்மழை தலையின் றாக நந்நீத்துச் 
    
சுடர்வாய் நெடுவேற் காளையொடு 
5
மடமா வரிவை போகிய சுரனே. 

என்பது மகட்போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.