(முடிபு) வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.
(கருத்து) தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.
(வி-ரை.) அறிதற்கும் துன்னுதற்கும் அரிய பொதியிலென்றாள்.
| “முயலுநர் முற்றா வேற்றரு நெடுஞ்சிமைப் |
| புகலரும் பொதியில்” (அகநா. 322:13-4) |
சூர் - முருகனும் வரையரமகளிரும், பொதியிற் சந்தனம்சிறப்புடைத்தாதலின் அதனைக் கூறினான். ‘அடுக்கத்தாஅம்’ என்றபாடத்திற்கு, மலையிலுள்ள நீரென்று பொருள் கொள்க; பொதியிற்சுனைநீர்,
| “தென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் |
| சூருடை நெடுஞ்சுனை நீர்” (தொல். களவு. 43, ந. மேற்.) |
என்று சிறப்பிக்கப்படும். வெயில் - வெம்மை.
வெம்மையையுடைய வேனிலில் தண்ணியளாகவும் குளிர் மிகுதியை யுடைய பனிக்காலத்தில் சிறுவெம்மையளாகவும் தலைவியிருத்தலின், எக்காலத்தும் அணைதற்கு இனியளானாள்.
ஒப்புமைப் பகுதி 2. சூருடையடுக்கம்: நற். 359:9;அகநா. 158:8, 162:25,198:14-7, 359:11. 1-2. பொதியிற் சந்தனம்:அகநா. 13: 2-5; சிலப். 4:38; பெருங். 1. 58:30, 2. 4:96.
(376)
(“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனதுஇயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்றுதலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.) 377. | மலரே ருண்கண் மாணலந் தொலைய |
| வளையேர் மென்றோண் ஞெகிழ்ந்ததன் றலையும் |
| மாற்றா கின்றே தோழியாற் றலையே |
| அறிதற் கமையா நாடனொடு |
5 | செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. |
என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஅழிந்து கூறியது.
மோசி கொற்றன் (பி-ம். மோசிற்றன.்)
(பி-ம்.) 5. ‘சிறுநன் னடையே’.
(ப-ரை.) தோழி--, அறிதற்கு அமையா நாடனொடு - தன் இயல்பு முற்றும் அறிதற்குப் பொருந்தாத தலைவனோடு,செய்து கொண்டதோர் சிறு நல் நட்பு - யாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பானது, மலர் ஏர் உண் கண்மாண் நலம் தொலைய - பூவினை யொத்த மையுண்ட