பக்கம் எண் :


673


     ஒப்புமைப் பகுதி 1-3. குன்றத்திற் கானவன் நிலத்தை அகழ்ந்து மணி பெறுதல்: அகநா. 282:2-5.

     6. பொம்மலோதி: குறுந். 191:6, ஒப்பு. ஓதி நீவுதல்: குறுந். 190:1, ஒப்பு.);‘‘பொம்ம லோதி நீவிய காதலொடு’’ (அகதா. 311:7)

 மு. 
“யாண்டுளன் கொல்லோ தானே மாண்குழை 
  
 மொய்யிருங் கூந்தன் முடியாப் பருவத்துப் 
  
 பெறுக நின்னை யானென 
  
 நறுநுத னீவிப் படர்தந் தோனே”     (தமிழ்நெறி. மேற். 96)  
(379)
  
(தலைவன் முன்பனிப் பருவத்தே வருவதாகக் கூறிச்சென்றானாகக்கூதிர்ப்பருவத்தின் இறுதியில் தோழி தலைவியை நோக்கி, “இனி, முன்பனிப் பருவம் வரும்; தலைவர் நம்மை நினைந்திலர்; என் செய்வேம்!” என்று கூறியது.)
 380.    
விசும்புகண் புதையப் பாஅய் வேந்தர்  
    
வென்றெறி முரசி னன்பல முழங்கிப் 
    
பெயலா னாதே வானங் காதலர் 
    
நனிசேய் நாட்டர் நம்முன் னலரே 
5
யாங்குச்செய் வாங்கொ றோழி யீங்கைய 
    
வண்ணத் துய்ம்மல ருதிர 
    
முன்னர்த் தோன்றும் பனிக்கடு நாளே. 

என்பது பனிப்பருவங் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவவரவின்கண் வேறுபடுவாளாயினும் கதுமென ஆற்றுவிப்பதுஅரிதென்னும் கருத்தினளாய்க் கூதிர்ப் பருவத்துத் தலைமகள் கேட்பத்தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது.

கருவூர்க் கதப்பிள்ளை.

     (பி-ம்.) 1. ‘புதைப்பாஅ’; 5. ‘யீங்கையத்துத் துய்ம்மலர’்; 7. ‘முன்னா தென்ப’, ‘முன்னர்த் தென்ப’.

    (ப-ரை.) தோழி--, விசும்பு கண் புதைய பாஅய் - வானம் மறையும்படி பரவி, வேந்தர் வென்று எறி முரசின்நல் பல முழங்கி - வேந்தர்கள் பகைவர்களை வென்றுஅறைகின்ற முரசத்தைப் போல நன்மையையுடைய பலமுறைமுழங்கி, வானம் - மேகம், பெயல் ஆனாது - மழை பெய்தலை நீங்காது, காதலர் நனிசேய் நாட்டர் -தலைவர் மிகச்சேயதாகிய நாட்டிலே உள்ளார; நம் முன்னலர் - அவர்நம்மை நினைத்தாரல்லர்; ஈங்கைய வண்ணம் துய் மலர்உதிர - ஈங்கையிலுள்ளனவாகிய நிறத்தையும் உளையையும்உடைய மலர்கள் உதிராநிற்ப, முன்னர் தோன்றும் -இனிமேல்