பக்கம் எண் :


674


தோன்றுதற்குரிய, பனி கடுநாள் - கடிய பனிப்பருவத்தில்,யாங்கு செய்வாம் - என்ன செய்வாம்!

     (முடிபு) தோழி, வானம் பெயல் ஆனாது; காதலர் நனி சேய் நாட்டர்; நம் முன்னலர்; பனிக்கடு நாளில் யாங்குச் செய்வோம்!

     (கருத்து) தலைவர் தாம் குறித்த பருவத்தே வாராராயின் என் செய்வேம்!

     (வி-ரை.) கொல்: அசை நிலை. “ஈங்கைமலர் இப்பொழுது உதிரா நிற்ப, இனிப்பனிக்கடுநாள் தோன்றும்” என்றாள். ஈங்கை கூதிர்க்காலத்தில் மலர்ந்து உதிரும் இயல்புடையது (குறுந். 110)

     பனிநாள், கடுநாளென்க.

     ஒப்புமைப் பகுதி 2. வென்றெறி முரசு: புறநா. 112:4, 351:5.

     1-3. மேகமுழக்கத்திற்கு முரசின் ஒலி: குறுந். 270:3, ஒப்பு: அகநா. 175:12-3.

     மழையால் விசும்பு மறைதல்: குறுந். 355:1, ஒப்பு.; நற். 347:1-2. 4. நனிசேய் நாட்டர்: குறுந். 228:5; நற். 115:8. 5. யாங்குச் செய்வாம்:குறுந். 217:3, ஒப்பு..

     5-6. ஈங்கைய வண்ணத் துய்ம்மலர்: குறுந். 110:5-6. ஈங்கையின்மலர் துய்யையுடையது: குறுந். 110:5-6, ஒப்பு.ஈங்கைமலர் கூதிர்பபருவத்தில் உதிர்தல்: குறுந். 110:5-7, ஒப்பு.

(380)
  
(வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவனோடு அளவளாவியதன்பயன் இங்ஙனம் வருந்தியிருத்தல் கொல்?” என்றுதோழி கூறியது.)
 381.   
தொல்கவின் றொலைந்து தோணலஞ் சாஅய்  
    
அல்ல னெஞ்சமோ டல்கலுந் துஞ்சாது 
    
பசலை யாகி விளிவது கொல்லோ 
    
வெண்குருகு நரலுந் தண்கமழ் கானற் 
5
பூமலி பொதும்பர் நாண்மலர் மயக்கி 
    
விலங்குதிரை யுடைதருந் துறைவனொ 
    
டிலங்கெயிறு தோன்ற நக்கதன் பயனே. 

என்பது வரைவிடை ஆற்றாளாகிய (பி-ம். ஆற்றாளாய்த்) தலைமகளை ஆற்றுவிக்கந்லுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

     (பி-ம்.) 3. ‘பகலையாகிய’; 5. ‘நன்மலர’்; 7. ‘னக்கதன’்.

    (ப-ரை.) வெள் குருகு - வெள்ளை நாரைகள், நரலும் -ஒலிக்கின்ற, தண் கமழ் கானல் - தண்ணியதாகக் கமழ்கின்றகடற்கரையிலேயுள்ள, பூ மலி பொதும்பர் நாள் மலர் மயக்கி -