பக்கம் எண் :


678


    (கு-பு.) இக்கருத்து சிறந்ததாகத் தோன்றுகிறது.

    ஒப்புமைப் பகுதி 5. தளிரைப் போல நடுங்குதல்: “கொல்புனற் றளிரினடுங்குவனள்” (பதிற். 52:21).

(383)
  
(பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, “நின்சூள் பொய்யுடைத்து” என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
 384.    
உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள் 
    
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் 
    
நலனுண்டு துறத்தி யாயின் 
    
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. 

என்பது “நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளுறவு நன்றாயிருந்தது!”என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.

ஓரம்போகியார் (பி-ம். காம்போதியார்).

    (பி-ம்.) 1. ‘கழுத்திற’், ‘கழுதின’்; 4. ‘மகிழ்ந்தநின’்.

    (ப-ரை.) மகிழ்ந -- தலைவ, உழுந்து உடை கழுந்தின் - உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள, கரும்பு உடை பணை தோள் - கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும், நெடு பல் கூந்தல் - நெடிய பலவாகிய கூந்தலையும், குறு தொடி மகளிர் - குறிய வளைகளையும் உடைய பரத்தையரது, நலன் உண்டு - பெண்மைநலத்தை நுகர்ந்து, துறத்தி ஆயின் - துறந்துஈண்டு வருவாயாயின், நின் சூள் - நீ அவர் மாட்டுச் செய்தசூள், மிக நன்று - மிக நன்றாக இருந்தது!

    (முடிபு) மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!

    (கருத்து) நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.

    (கருத்து) தலைவன், “அங்கவர் யாரையும் அறியேன்” என்று சூள் செய்தானாக, “நீ இங்ஙனமே பரத்தையர் மாட்டும் சூள் செய்து அவர்நலன் நுகர்ந்து இப்பொழுது பிரிந்தாய். அவ்வியல்பே ஈண்டும் நின்பால் உள்ளதாதலின் நின்சூள் ஏற்கத் தகுவதன்று” என்று தோழி கூறி வாயில் மறுத்தாள்.

    உழுந்தை அடித்தற்குரிய தடியின் கழுந்து தேய்ந்து வழுவழுப்பாகவும் பருத்ததாகவும் இருத்தலின் அதனைத் தோட்கு உவமை கூறினாள். பரத்தையர் தோளுக்குக் கூறினமையின் பிற உயர்ந்த பொருள்களைக் கூறாது இதனைக் கூறினாள். காமனது வில்லாகிய கரும்பின் உருவத்தைக் குங்குமக் குழம்பால் மகளிர் தோளில் எழுதுதல் வழக்கம். தோளையுங்கூந்தலையும் சிறப்பித்துக் கூறியது முயங்குதற்குரிய இயல்பினரென்பது