பக்கம் எண் :


679


கருதி. மகளிரென்று பன்மை வாசகம் படக்கூறியது தலைவன் பலர்பால் அன்புடையானென்பதை நினைந்து. இதுவே வாயின் மறுத்தற்கு ஏதுவாயிற்று.

    அம்ம: வியப்புக் குறிப்பு. சூளே: ஏ ஈற்றசை.

    ஒப்புமைப் பகுதி 1. மகளிர் தோள்களில் கரும்பின் வடிவத்தை எழுதுதல்:“தோண்மேற், கரும்பெழுது தொய்யிற்கு”, “நற்றோளிழைத்தகரும்புக்கு”, “தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய்தனைத்தற்கோ”, “நடாஅக் கரும்பமன்ற தோளாரை”, “அன்றுதானீர்த்த கரும்பணிவாடவென், மென்றோண் ஞெகிழ்த்தான்”, “நெடுமென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்லன்” (கலி. 63:7-8, 64:19, 76:15, 112:6, 131:29-30,143:31-2); “கரும்பும் வல்லியும் பெருந்தோளெழுதி” (சிலப். 2:29)

    2. குறுந்தொடி: குறுந். 267:5, 356:8.

    3. நலனுண்டு துறத்தல்: “தோணல முண்டு துறக்கப்பட்டோர்” (கலி். 23:8.)

    4. தலைவனது சூள்: குறுந். 238:5, ஒப்பு.

(384)
  
(நொதுமலர் வரைவொடு புகுந்தமையறிந்த தலைவி, ‘‘தலைவன்தன் அன்பிற் சிறிதும் குறையாதிருப்ப அதனை யறியாது இவ்வூரிற்புதியோர் சிலர் வந்தனர்” என்று கூறுவாளாய்த் தோழியை அறத்தொடுநின்று அவ்வரைவை மாற்றச் சொல்லியது.)
 385.    
பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை 
    
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் 
    
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் 
    
இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் 
5
பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்றும் 
    
அன்றை யன்ன நட்பினன் 
    
புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. 

என்பது வேற்று வரைவு மாற்றியது.

    [“உயிர்செல, வேற்றுவரைவு வரினது மாற்றுதற்கண்ணும்”(தொல். களவு. 20) ]

கபிலர்.

    (பி-ம்.) 1. ‘பழமருந்தினக்கலை’, ‘பழந்தினினக்கலை’, 2. ‘சிலையிற’்;7.‘தாமிவ்’, ‘இப்பழங்கேளூரே’.

    (ப-ரை.) பலவில் சேர்ந்த பழம் ஆர் இனம் கலை -பலாமரத்திற் பொருந்திய பழத்தை உண்ட திரளையுடைய ஆண் குரங்குகள், சிலைவில் கானவன் செதொடை வெரீஇ -