பக்கம் எண் :


693


பசும்பூட் பாண்டியனுக்கும் கொங்கருக்கும் பகைமையுண்டென்பதும் அவ்விருவரிடையே போர் நிகழ்ந்ததென்பதும்,

  
“வாடாப் பூவிற் கொங்க ரோட்டி 
  
 நாடுபல தந்த பசும்பூட் பாண்டியன்”    (அகநா. 253:4-5) 

என்பதனால் வெளியாகும். கொங்கரால் அதிகன் போரிற் கொல்லப்பட்ட பின்னர்ப் பாண்டியன் மிடல் கொண்டு கொங்கரொடு பொருது அவரைத் தோல்வியுறச் செய்திருத்தல் கூடும்.

    களிற்றொடுபடுதல் களிற்றுடனிலை யென்னும் துறைப்பாற்படும்.வென்ற வீரர் ஆர்த்தல் இயல்பு. பெரிதே: ஏ அசைநிலை; தேற்றமுமாம்.

     ஒப்புமைப் பகுதி 1-2. கோதை குழைய முயங்குதல்: கலித். 68:14, 91:11-2, 112:23; புறநா. 73:14; சீவக. 582, 2034.

    5. களிறொடுபடுதல்: “குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன்”(புறநா. 307:2.)

    6. வென்றவீரர் ஆர்த்தல்: குறுந். 34:5, ஒப்பு.

    2-6. அலர் ஆர்ப்பினும் பெரிது: குறுந். 328: 4-8, ஒப்பு.

(393)
  
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “தலைவன் முன்பு இனியனாகத் தோற்றி இப்பொழுது இன்னாமைக்கு ஏதுவானான்” என்று தோழி கூறியது.)
 394.    
முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி 
    
நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற 
    
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி 
    
முன்னா ளினிய தாகிப் பின்னாள் 
5
அவர்தினை மேய்தந் தாங்குப் 
    
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.  

என்பது வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் (பி-ம். ஆற்றுவிக்கலுறும்) தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.

குறியிறையார் (பி-ம். குறையிறையார்)

    (பி-ம்.) 2. ‘யாகத்துக’்; 3. ‘மறுவரவந்தோடி’; 5. ‘வார்தினைப’், அவர் தினைப் புன மேய்ந்தாங்கு. சில பிரதிகளில் நாலாம் அடிக்கு முன் ‘கூரை முற்றுஞ் சார னாடன்’ என்று ஓரடி காணப்படுகின்றது.

    (ப-ரை.) முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கைச்சந்தையுடைய