பக்கம் எண் :


697


(தலைவனுடன் தலைவி சென்றபின் செவிலித்தாய் அவளதுஇளமைத் தன்மையையும் பாலையின் வெம்மையையும் நினைந்துவருந்திக் கூறியது.)
 396.    
பாலு முண்ணாள் பந்துடன் மேவாள் 
    
விளையா டாயமொ டயர்வோ ளினியே 
    
எளிதென வுணர்ந்தனள் கொல்லோ முளிசினை 
    
ஓமை குத்திய வுயர்கோட் டொருத்தல் 
5
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் 
    
மழைமுழங்கு கடுங்குர லோர்க்கும் 
    
கழைதிரங் காரிடை யவனொடு செலவே. 

என்பது மகட்போக்கிய தாய் உரைத்தது.

கயமன்.

    (பி-ம்.) 3. ‘வுரைத்தனள்’, ‘முறிசினை’; 4. ‘ஓமைக்’, ‘டொருத்தனல்’; 5. ‘வெவ்வறைக்’; 7. ‘செலலே’.

    (ப-ரை.) பாலும் உண்ணாள் - பாலையும் உண்ணாளாகி, பந்துடன் மேவாள் - பந்தையும் விரும்பாளாகி, விளையாடு ஆயமொடு அயர்வோள் - முன்னர்த் தன்னோடு விளையாடும் மகளிர் கூட்டத்தோடு விளையாடிய தலைவி, இனி - இப்பொழுது, முளிசினை ஓமை குத்திய - உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய, உயர் கோடு ஒருத்தல் - உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை, வேனில் குன்றத்து வெ அரை கவாஅன் - வேனிலின் தன்மையையுடைய மலையினிடத்துள்ள வெம்மையாகிய அடிவாரத்தில், மழை முழங்கு கடு குரல் ஓர்க்கும் - மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கும், கழை திரங்கு அருஇடை - மூங்கில்கள் உலர்ந்த செல்லுதற்கரிய இடத்திலே, அவனொடு செலவு - அத்தலைவனோடு செல்லுதல், எளிது என உணர்ந்தனள் கொல்லோ - எளிமையையுடையதென்று அறிந்தாளோ?

     (முடிபு) உண்ணாள், மேவாள், அயர்வோள், இனி அவனொடு செலவு எளிதென உணர்ந்தனள்கொல்லோ?

     (கருத்து) தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதெனநினைத்தனளோ?

     (வி-ரை.) ‘பாலு முண்ணாது தனக்கு இனிய பந்தையும் விரும்பாது ஆயத்தோடு இடைவிடாது விளையாடும் இயல்புடையாள் எங்ஙனம்