பக்கம் எண் :


23


    மு. காமக்கிழத்தியர் தலைவனை இகழ்ந்தது (தொல்.கற்பு.10,இளம்.)இல்லிடத்திருந்து தலைவனும் தலைவியும் ஊடியும் உணர்த்தியும் செய்ததொழிலைக் கேட்டுக் காமக்கிழத்தி இகழ்ந்தது (தொல். கற்பு .10,ந); ‘இது குறுந்தொகை. புறன் உரைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினர் கேட்ப உரைத்தது; இது (மருதத்திற்கு)1 முதுவேனில் வந்தது’ (தொல். அகத். 8.ந.)

    ஒப்புமைப் பகுதி1.கழனி மா: “கொக்கார் வளவய லூர’’ (பழ. 18); "கொக்கார் வளவய லூரன்’’ (கைந்நிலை ,48) மாத்துத் தீம்பழம்: "தேக்கொக்கு”, "பால்கலப் பன்ன தேக்கொக்கு’’ (குறுந்.26:6, 201:2); ‘’கொக்கினுக் கொழிந்த தீம்பழம்’’ (நற். 280:1.) மாம்பழம் விளைந்து உகுதல்: "நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்’’ (ஐங்.61:1); "மாவின் பழம்விழும் படப்பை யெல்லாம்"(தே. திருநா. திருவலம்புரம்)

    2. கதூஉம்: "கெண்டை கதூஉம்’’ (குறுந்.91:2.); "நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சிப,் பூக்கதூஉ மினவாளை” (புறநா.18:7-8.) 1-2. மாம்பழத்தை வாளை உண்ணல்: "கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு, துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்’’ (குறுந்.164:1-2); "வனமாவி னிருங்கனி யுண்டுமதர்த், தினவாளை யிரைத்தெழுகின்றன காண்’’ (சூளா.சீயவதைச்.231);"வண்டுறை மருங்கினாங்கோர் மாங்கனி வீழ்தல் கண்டே... வென்றொருவாளை தன்வாய்க், கொண்டுறை வலிமை நோக்கி’’ (வி.பா. திரௌபதிமாலை.13.)

    4-5. ஆடிப் பாவையின் இயல்பு: "ஆடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான்’’ (சீவக. 957); "கண்ணாடி யனைய நீர்மைப், பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே’’ (திருவாரூர் மும்மணிக்.19:17-8)"மாற்றிரி, ஆடிப் பாவையோ டலர்நிழற் பாவை, கைகான் மெய்பிறிதெவையும் பைபயத், தூக்கிற் றூங்கி மேக்குயர் புயர்தல்’’(ஞானமிர்தம்,6:20-23); "ஆடிவந்த நற்பாவை போலடியார், கூடவிளையாடி வந்த கோமானே (தமிழ்விடு.252.) 6. மேவன செய்தல்: குறள்.1073. புதல்வன் தாய்: குறுந்.359:6; ஐங்.90:4, 405:4, 442:5; அகநா.6:13 கருத்து ஒப்பு: அகநா.166. கருத்து

(8)
  
(பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவிடத்துத்தோழி, "தலைவனது பரத்தைமையாகிய கொடுமையால் துன்புறுபவளாயினும்தலைவி அவன் செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்திற் சிறப்புற்றிருக்கின்றாள்; ஆதலின் சினந்திலள்” என்று கூறுமுகத்தால் தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.).
 9.   
யாயா கியளே மாஅ யோளே 
    
மடைமாண் செப்பிற் றமிய வைகிய 
    
பெய்யாப் பூவின் மெய்சா யினளே 
    
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் 
 1.  
மாம்பழம் முதிர்ந்து உதிர்வது கூறப்படுதலின் அதற்குரிய
காலமாகிய முதுவேனில் என்றார்.