பக்கம் எண் :

10அகநானூறு

(மே - ள்.) “நாற்றமும் தோற்றமும்”1 என்னும் சூத்திர வுரையில் இச் செய்யுளை எடுத்துக் காட்டி, “விலங்கும் எய்தும் நாட” என்று அந்நாட்டினை இறப்பக் கூறி, இந்நாடுடைமையிற், ‘குறித்த இன்பம் நினக்கெவனரிய’ என வரைதல்வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனால் தினையறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறும், ‘கங்குல் வருதலுமுரியை’ எனப் பகற்குறி மறுத்து இரவுக் குறி நேர்வாள்போற் கூறி ‘நெடுவெண்டிங்களு மூர்கொண் டன்றே’ என்று அதனையும் மறுத்து வரைதற்கு நல்ல நாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க” என்றார், நச்.

3. பாலை

[முன்னெரு காலத்து நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப் பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்ப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.]

 இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை ஈன்றியைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய
5.மான்றுவேட் டெழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
ஒண்செங் குருதீ உவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
10.கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல்லிலை மராஅத்த
2 அகன்சே ணத்தங்
கலந்தரல் உள்ளமொடு கழியக் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழ எவ்வமென் களைமா
15.கவிரித ழன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்கம்
நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே.
 

-எயினந்தை மகனார் இளங்கீரனார்.


1. தொல். களவு: 23.

(பாடம்) 2. புல்லிலை யாஅத்த.