தல் - செறிதல், மிகுதல். ஏரினையுடைய தோள் என்க. நிறுப்ப-நி்ற நிலையினின்று அழியாமல் நிறுத்தவும். கங்குல் வருதலு முரியை - பகற்குறியே யன்றி இரவுக்குறியில் வருதற்கு முரியை. வேங்கையும் விரிந்தன என்றது. தினைப்புனம் அறுத்துத் தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்றபடி; என்னை? வேங்கை மலருங்காலம் தினைமுற்றி அறுககுங் காலமாகலின். இதனாற் பகற்குறி மறுத்ததாம். காவலர் சோர்பத னொற்றி என்பதனால் இரவுக்குறி யருமை கூறி அதுவும் மறுத்ததாம். இரண்டிற்கம் உடம்படுவாள் போன்று இரண்டினையும் மறுத்துத் தோழி வைரவுகடாயினவாறு. நெடு வெண்டிங்கள் என்பதற்க நெடும்பொழுது ஒளி செய்யும் நிறைமதி யெனப் பொருள்கொண்டு, ஊர்கொண்டன்று என்பதற்குக் குறைவின்றி வட்டமாக ஒளி பரந்தது என்றுரைத்தலுமாம். திங்கள் நிரம்புதலுற்றது என்றமையால் திருமணத்திற்கரிய நாளாதலும், நொதுமலர் வரைய முற்படுவர் என்பதும் புலப்படுத்தி, விரைவில் வரைந்து கொள்ளுமாறு தூண்டியவாறாயிற்று. வேங்கை மலர்தலும் மணஞ் செய்யுநாள் குறித்தலாகக் கோடலும் அமையும். உம்மை யெச்சத்திற்கு முடிவு கூறும் 1சூத்திரவுரையிற் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் “வேங்கையும்....ஊர் கொண்டன்றே” என்பதில், இணர் விரிதலும் ஊர் கோடலும் மணஞ் செய்யுங் காலங்குறித்தலின் அவை ஒரு வினைப்பாற்படும் என்றுரைத்து, அவ்வும்மை எச்சவும்மையாதற் கிழுக்கின்மை தெரித்தமை அறியற்பாலது. களிற்றியானை நிரையின் குறப்புரையாசிரியர் ‘நெடுவெண்டிங்க ளென்றார்; ஆதித்தனுக்கு மேலாகலான்’ எனக் கூறியது பௌராணிக மதம். 2"மையார் கதலி வனத்து வருக்கைப் பழ விழுதேன் எய்யா தயின்றிள மந்திகள் சோரு மிருஞ்சிலம்பா மொய்யா வரியதெ னம்பலத் தான்மதி யூர்கொள் வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே” என்னும் திருசிற்றம்பலக்கோவைச் செய்யுளும், அதனுரையும் இச் செய்யுளின் கருதுக்களைக் கொண்டு இயன்றிருப்பது அறிந்து இன்புறற்பாலது. (உள்ளுறை) கடுவனானது தேனை அறியாது நுகர்ந்து, பின்பு தன்றொழிலாகிய மரமேறலு மாட்டாது, பிறிதோாடத்திற் செல்லவு மாட்டாது, அயலதாகிய சந்தன மரத்தின் நிழலிற் பூமேலே உறங்கு கின்றாற்போல, நீயும்இக் களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி, இக் களவினை நீக்கி வரையவு மாட்டாது, இக் களவொழுக்கமாகிய இன்பத்திலே மயங்கா நின்றாய் என்றவாறு.
1. தொல். எச்ச: 40. 2. திருச்சிற்: 262. |