உண்போரைப் பிறவற்றை யுண்ணமல் தடுத்த பக்கமலையிலுள்ள பலாவின் முற்றிய சுளையாலும், பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்-பாறை யிடத்து நெடிய சுனையில் உண்டாகிய தேனை, அறியாது உண்ட கடு வன் - தேனென் றறியாதே உண்ட ஆண்குரங்கு, அயலது - அச் சுனையின் பக்கத்ததாகிய. கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது - மிளகுக் கொடி படர்ந்த சந்தனமரத்தில் ஏறமாட்டாது, நறு வீ அடுக்கத்து மகிழந்து கண்படுக்கும் குறியா இன்பம் - நறிய பூக்களாலாய படுக்கையிற் களிப்புற்று உறங்கும் எதிர்பாராத இன்பத்தை, நின்மலைப் பல் வேறு விலங்கும் நினது மலையிலுள்ள பல்வகை விலங்குகளும், எளிதின் எய்தும் நாட - எளிதாக அடையும் நாடனே!, 10. குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய - நீ குறித்து முயலும் இன்பங்கள் நினக்கு எங்ஙனம் அரியனவாகும்? 11-15. வெறுத்த ஏஎர் - மிக்க அழகினையுடைய, வேய் புரை பணைத்தோள் இவளம் - மூங்கிலை யொத்த பருத்த தோளினையுடைய இவளும், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இனையள் ஆயின்-நிறுத்தவும் நில்லாது ஓடும் நெஞ்சினளாய் நின்னிடத்தே இத்தகைய காதலுடையளாயின், தந்தை அருங்கடிக் காவலர் சோர் பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை -இனி நீ இவள் தந்தையின் அரிய காத்தற் றொழிலையுடைய காவலாளர் சோர்வுற்றிருக்குஞ் செவ்வியை மறைய உணர்ந்து இரவில் வருவதற்கும் உரியை; 15-17. பைம்புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன் - அன்றியும் பசிய புதர் சூழ்ந்த வேங்கை மரங்களும் ஒள்ளிறய பூங்கொத்துக்கள் விரியப் பெற்றன; நெடுவெண் திங்களும் ஊர் கொண்டன்று - மிக்க வெண்மையையுடைய திங்களும் நிரம்புதலுற்றது. (முடிபு) நாடனே, குறித்த இன்பம் நினக்கு எங்ஙனம் அரியன; இவளும் இளையனாயின் கங்குல் வருதலும் உரியை; வேங்கையும் இணர் விரிந்தன; திங்களும் ஊர் கொண்டன்று. (வி - ரை.) சுளையொடு-சுளையால், ஒடுவைக் கனியொடுங் கூட்டுக. கனியாலும் சுளையாலும் விளைந்த ஊழ்படுதேறல் என்றுமாம்; ஊழ்படு- முறைமைப்பட்ட. உண்ணுநர்த் தடுத்த என்னும் அடை கனிக்கும பொருந்தும். வாழைக் கனியையும் பலவின் சுளையையும் உண்டு, அவற்றால் விளைந்த தேறலையும் அறியாது மாந்திய கடுவன் என்றுரைத்தலும் பொருந்தும். அறியாதுண்டல் - நீர்வேட்கையால் இதனைத் தேறலென்றறியாது நீரென்றுண்டல். சாந்த மேறாது என்றது மரமாயிற் சந்தனமே ஆண்டுள்ளதென்னுங் குறிப்பிற்று. விஅடுக்கம் - பூப்படுக்கை. குறியா இன்பம்- சிந்தனையும் முயற்சியுமின்றி வந்த இன்பம். கடுவனெய்திய குறியா வின்பத்தை அதுவேயன்றி வேறு ல் விலங்கும் எய்தும் நாடென்க. எய்துமென்னும் பெயரெச்சம் இடப்பெய்ா கொண்டது. விலங்குமென்னும் உம்மை இழிவு சிறப்பு. வெறுத் |