4. முல்லை [தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.] | | முல்லை வைந்நுனை1 தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப | | 5. | மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானம் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன2 வாங்குவள் பரியப் | | 10. | பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த3 மாண்வினைத் தேரன் உவக்காண்4 தோன்றும் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது | | 15. | நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே. | | | -குறுங்குடி மருதனார். |
(சொ - ள்.) 17. ஆய்தொடி அரிவை - ஆராய்ந்த வளையினையுடைய அரிவையே!’ 1-7. முல்லை வை நுனை தோன்ற - முல்லையினது கூரிய நுனியையுடைய அரும்புகள் தோன்றவும், இல்லமொடு பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ-தேற்றாமரத்தின் முகையொடு பசிய அடியினையுடைய கொன்றைமரத்தின் முகைகள் மெல்லிய கட்டு நெகிழ்ந்து விரியவும், இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பிற் ரல் அவல் அடைய இரலை தெறிப்ப - இரும்பை முறுக்கிவிட்டாற் போலும் கரிய பெரிய கொம்பினையுடைய ஆண் மான்கள் பரல்களையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளிக் குதிக்கவும், மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப - அகன்ற காடுறை யுலகில் நீரில்லாத வருத்தம் விட்டொழியவும், கருவி வானம் கதழ் உறை சிதறி கவின் பெறுகானம் கார்ள செய்தன்று - மின் முதலியவற்றின் தொகுதியையுடைய மேகம்
(பாடம்) 1. வைந்நுதி. 2. நரம்பார்பபன்ன. 3. யாத்த. 4. உதுக்காண். |