விரைந்து வீழும் துளிகளைச் சிதறி அழகிய அக் காட்டினைக் கார்ப்பருவம் செய்தது; 13-17. குறும் பொறை நாடன் - குறிய மலைகளையுடைய நாட்டினையுடைய தலைவன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது - ஆரவாரிக்கும் ஒலி பொருந்திய விழவினையுடைய உறையூர்க்குக் கீழபாலுள்ளதாகிய, நெடும் பெருங் குன்றத்து - நீண்ட பெரிய மலையின் கண்ணே, அமன்ற காந்தள் போதுஅவிழ அலரின் நாறும் நின் மாண்நலம் படர்ந்து - நெருங்கிய காந்தளின் போது விரிந்த மலரென நாறும் நினது சிறந்த அழகினை நினைந்து; 8-13. குரங்கு உளை பொலிந்த கொய் சுவல்புரவி - வளைந்த தலையாட்டத்தாற் பொலிந்த கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகள், வாங்கு வள் பரிய-இழுக்கும் கடிவாளம் நெகிழ (விரைந்து ஓட), பூத்த பொங்கர் துணையொடு வதிந்த - பூத்த சோலையில் பெடையொடு தங்கும், நரம்பு ஆர்த்தன்ன தாது உண் பறவை - யாழின் நரம்பு ஒலித்தாலொத்த ஒலியினையுடைய தேனை யுண்ணும் வண்டுகள், பேதுறல அஞ்சி - மயங்குமென அஞ்சி, மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன் - மணிகளின் நாவை ஒலியாமற் கட்டிய மாண்புற்ற தொழிலமைந்த தேரினை யுடையனாய், உவக்காண் தோன்றும் - உவ்விடத்தே தோன்றும். (முடிபு) அரிவை! கானம் கார்செய்தன்று; குறும்பொறை நாடன் மாண் நலம் படர்ந்து தேரனுய் உவக்காண் தோன்றும். தோன்ற, அவிழ, தெறிப்ப, புறக்கொடுப்ப, வானம் உறை சிதறிக் கானத்தைக் கார் செய்தன்று என்க. மருப்பின் இரலை எனவும், அவலடையத் தெறிப்ப எனவும், நரம்பரர்ததன்ன பறவை எனவும், புரவி வள்பரிய (விரைதலால்) அஞ்சி மணி நரஆர்த்த எனவும், நாடன் நலம் படர்ந்து தோன்றும் எனவும் கொண்டு கூட்டுக. (வி - ரை.) ‘நுனை’ என்றது நுனையையுடைய மொட்டை. இல்லம் கொன்றை என்பன அவற்றின் சினையாகிய அரும்பை யுணர்த்தி நின்றன. மாயிரு: யகர வுடம்படு மெய் பெற்றது, ‘கிளந்தவல்ல’1 என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்க. குரங்கல் - வளைதல்; கிளைவிரி கருபின் கணைக்கால் வான்பூ - மாரியங் குருகி னீரிய குரங்க’ (235) எனப் பின்னரும் வந்துளது. ‘குரங்கமையுடுத்த மரம் பயில் அடுக்கத்து’2 என்றார் இளங்கோவடிகளும். புரவியினது வாங்குவள், நரம்பார்த்தன்ன பரிய எனக் கொண்டு கூட்டினர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ; வார், நரம்பு போலச் சிறிது ஒலிக்கும் என்பதும், அதனை ஆர்த்திலன் என்பதும் அவர் தம் கருத்தாகும். அஞ்சி: அருள் காரணமாகத் தோன்றும் அச்சம். துணையொடு வதயும் வண்டு பிரிந்து வருந்துதற்கும் அஞ்சுவான் தலைவனாகலின் அவன் நின்னைப் பிரிந்திருக்க ஒருப்படான் என்பது குறிப்பு.
1. தொல். குற்ற ிய: 78. 2. சிலப். 10 : 157 . |