பொருட்டு, உடன்பாடு தெரிவிக்கும் தகுதியுடையார் பலரும் எழுதிக் குடத்தின்கட் போகடட ஓலைகளை, ஆவண மாக்கள் பலர் முன் குடத்தின் மேலிட்ட இலச்சினையைக் கண்டு, நீக்கி, உள்ளிருக்கும் ஓலைகளை எடுத்து எண்ணித் தேரப்ட்டார் இவரென்ன முடிவு செய்வதொரு வழக்கத்தினைக் குறிப்பது. இது குடவோலை என்று கூறப்படும்; பழைய கல்வெட்டுக்களில் இம்முறை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆவணமாக்கள் - பிரமாணம் வாங்குகிற மாக்கள் என்பாரும் உளர். ஓலை கொண்மார் அழிக்கும் மாக்கள் என்பதனை, அழித்து ஒலை கொள்ளும் மாக்கள் என மாறுக. எல் வளி - தோற்றமுடைய வளியுமாம். 78. குறிஞ்சி [களவுக் காலத்துப் பிரிந்துவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.] | நனந்தலைக் கானத் தாளி யஞ்சி இனந்தலைத் தரூஉ மெறுழ்கிளர் முன்பின் வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப் பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல் | | 5. | இரும்பிணர்த் தடக்கையின் ஏமுறத் தழுவக் கடுஞ்சூன் மடப்பிடி நடுங்குஞ் சாரல் தேம்பிழி நறவின் குறவர் முன்றில் முந்தூ ழாய்மலர் உதிரக் காந்தள் நீடிதழ் நெடுந்துடுப் பொசியத் தண்ணென | | 10. | வாடை தூக்கும் வருபனி யற்சிரம் நம்மின் புலம்பிற் றம்மூர்த் தமியர் என்னா குவர்கொல் அளியர் தாமென எம்விட் டகன்ற சின்னாட் சிறிதும் உள்ளியும் அறிதிரோ ஓங்குமலை நாட | | 15. | உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா | | 20. | தாளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி |
|