பக்கம் எண் :

186அகநானூறு

ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே.

-மதுரை நக்கீரனார்.

(சொ - ள்.) 14. ஓங்கு மலைநாட - ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே; 

1. நனந்தலை கானத்து ஆளி அஞ்சி - அகன்ற இடத்தையுடைய காட்டினிடத்தே ஆளியினை யஞ்சி;

2-5. இனம் தலைத் தரூஉம் - தன் இனத்தைத் தன்னிடத்தே கூட்டிக் கொள்ளும், எறுழ் கிளர் முன்பின் - விளங்கத் தோன்றும் மிக்க வலியினையும், வரி ஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து - வரி யினையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாயிற்புகும் மதத்தினையும் உடைய, பொறி நுதல் பொலிந்த - புள்ளிகள் பொருந்திய நெற்றியாற் பொலி வுற்ற, வயக்களிற்று ஒருத்தல் - வலி பொருந்திய ஆண் யானைகளின் தலைவன், இரு பிணர்த் தடக்கையின் - கரிய சருச்சரையுடைய பெரிய கையால், ஏம் உறத் தழுவ - பாதுகாவல் தோன்றத் தழுவவும்;

6. கடும் சூல் மடப்பிடி நடுங்கும் சாரல் - முதற் சூலையுடைய இளைய பிடி நடுங்கும் பக்க மலையிலுள்ள;

7. தேம்பிழி நறவின் குறவர் மன்றில் - இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களது முற்றத்தில்;

8-10. முந்தூழ் ஆய் மலர் உதிர - மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தள் நீடுஇதழ நெடுந்துப்பு ஒசிய - காந்தளது நீண்ட இதழையுடைய பெரிய மலர் முறியவும், தண்என வாடை தூக்கும் - தண்ணென்று வாடைக்காற்று வீசம், வருபனி அற்சிரம் - தோன்றுகின்ற பனியையுடைய முன்பனிக் காலத்தில்;

11-3. எம்விட்டு அகன்ற சின்னாள் - எம்மைவிட்டகன்றிருந்த சில நாட்களுள்ளே, நம் இல் புலம்பில் - நம்மைப் பிரிந்திருக்கும் தனி மையால் தம்மூரின் கண்ணே, தமியர் அளியர் தாம் - தனித்திருக்கும் இரங்கற்குரிய இவர், என் ஆகுவர் கொல் என - எந்நிலை யடைவரோ என எண்ணி இரங்கி:

15-24. உலகுடன் திரிதரும் பலர் புகழ நல்லிசை-உலகெலாம் பரக்கம் பலரும் புகழும் நல்ல புகழினையும், வாய்மொழி - மெய்ம் மொழியினையுமுடைய, கபிலன் சூழ - கபிலன் ஆய்ந்து வினைசெய, சேய் நின்று செழும் செய் நெல்லின் விளை கதிாகொண்டு - நெடுந் தொலைவினின்று வளம்பொருந்திய வயல்களில்விளைந்த நெற் கதிர் களைக் கொண்டுவந்து, தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி - அவற்றைப் பெரிய தாளினையுடைய ஆம்பல் மலராகிய அவியலொடு அட்டு