பக்கம் எண் :

களிற்றியானை நிரை187

உண்பித்து, யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையா - பல யாண்டு கள் கழியவும் போரை விருபிச் செய்யும் இடத்தினின்றும் பெயராமல், தாள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி - பகைவர் வாட்போரினைக் கலக்கி முயற்சியால் வென்று, ஏந்து கோட்டு யானை வேந்தர் ஒட்டிய - நிமிர்ந்த கொம்புகள் பொருந்திய களிற்றினையுடைய மூவேந்தரையும் பிறக்கிடச் செய்த, கடும் பரிப் புரவிக் கைவண் பாரி-மிக்க விரைவினையுடைய கதிரையையும் கைவண்மையையுமுடைய பாரியின், தீம்பெரும் பைஞ்சுனை பூத்த-இனிய பெரிய பசிய சுனைக்கட் பூத்த, தேம் கமழ் புதுமலர் நாறும் இவள் நுதல் -தேன் மணக்கம் புதிய மலரென மணக்கும் இவளது நெற்றயினை;

13-4. சிறிதும் உள்ளியும் அறிதிரோ - சிறிதளவேனும் நினைத்தறிந்தீரோ.

(முடிபு) மலை நாட! ஆளி யஞ்சி, ஒருத்ல் தழுவவும் மடப்பிடி நடுங்கும் சார லிடத்துக் குறவர் முன்றிலில் வாடை தூக்கும் அற்சிரம், நம்மில் புலம்பில் அளியர் என் ஆகுவர் கொல் என, பாரியின் சுனைபூத்த புதுமலர் நாறும் இவள் நுதலைச் சிறிதும் உள்ளியும் அறிதிரோ.

(வி - ரை.) இனம் தலை: இங்குத் தலை அசையுமாம். எறுழ் முன்பு: ஒருபொரு ளிருசொல். மிஞிறு என்பது ஞிமிறு என்றாயிற்று. கடுஞ்சூல் - முதற் கரு. 1'நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்’ என்பது காண்க. தேம்பிழி நறவு- தேனாற் பிழிந்த நறவுமாம். துடுப்பு - துடுப்புப் போறலின் பூவிற்கு ஆகுபெயர். நம் மில் - நாம் இல்லாத என்க. ‘வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று, செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு, தடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி’ என்றத தமிழ்நாட்டு மூவேந்தரும் பாரியின் பறம்பரணை முற்றியிருப்ப, அரணிலுள்ளார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவர விட்ட வரலாற்றை உணர்த்தியவாறு. 2'பாரி பறம்பின், நிறைபறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்குபுறச் செந்நெற் றரீஇய வோரங், கிரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபட, படர் கொள் மாலை படர்தந் தாங்கு’ என இவ்ரலாறு ஒளவையாராலுங் கூறப்பட்டுளது. மலரொடு வட்டி என்பதன்பின், அட்டு உண்பித்து என வருவித்துரைக்க. பிழையா: ஈறுகெட்ட எதிாமறை வினையெச்சம். வேந்ந்ர் ஒட்டிய என இரண்டனுருபு உயர்திணை மருங்கிற்றொக்கு நின்றது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க.

(உ - றை.) ‘நனந்தலை...மடப்பிடி நடுங்கும்’ என்றது, ‘யானை காக்கவும் பிடி நடுங்கினாற்போல,’ நீயிர் இவளைப் பாதுகாக்க வேண்டுமென்னுங் கருத்துடையரா யிருக்கவும், பிரிவிற்கு அஞ்சாநின்றாள் என்றவாறு.


1. ஐங்கு: 309.

2. அகம்: 303.