79. பாலை [பொருள்வயிர் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.] | தோட்பதன் அமைத்த கருகை ஆடவர் கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில் பாருடை மருங்கின் ஊறல் மண்டிய | | 5. | வன்புலம் துமியப் போசிக் கொங்கர் படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள் அகலிரு விசம்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப | | 10. | வல்லாங்கு வருது மென்னா தல்குவர வருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக் கொடுவில் எயினர் கோட்சுரம் படர | | 15. | நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை கல்பிறங் கத்தம் போகி நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே. | | -குடவாயிற் கீரத்தனார். |
(சொ - ள்.) 11. வாழி என் நெஞ்சே-, 11-7. ஆடுதொற கனையும் அவ்வாய்க் கடுந்துடி-அடுந்தோறும் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய தடியினையும், கொடுவில் எயினர் கோள் சுரம் படர-வளைந்த வில்லினையுமுடைய மறவர் (பகைவரை வளைத்துக்) கொள்ளும் சுரத்தின்கட் செல்ல, இரும் சிறை வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை - பெரிய சிறையினையும் வள்ந்த வாயினையுமுடைய பருந்தின் வெள்ளிய கண்ணினை யுடைய பேடை, நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை - (தன் துணையினை நோக்கி) நெடுங் கூப்பீட செய்யும் செல்லத் தொலையாத நீண்ட இடமாய, கல் பிறங்கு அத்தம் போகி - கற்கள் விளங்கும் காட்டில்நடந்து, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீ-நிலை நில்லாத பொருளின்மேலுள்ள பற்றினால் பிரிதலுற்ற நீ; 1-9. தோட்பதன் அமைத்த கருங் கை ஆடவர் - தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய |