பக்கம் எண் :

களிற்றியானை நிரை189

ஆடவர்கள், வினைப்படர்ந்து-(கிணறு வெட்டும்) தொழிலிற் புக்கு, கனைபொறி பிறப்ப நூறி - மிக்க தீப் பாறி யுண்டாகப் பாறைகளை வெட்டி, கல்லுறுத்து இயற்றிய-கல்லுதல் செய்து அமைத்த, வல் உவர்ப் படுவில்-மிக்க உவரையுடைய கிணற்றில், பாருடை மருங்கின் ஊறல் மண்டி - பாரினை உடைத்த பக்கத்தே ஊறிய நீரை உண்ண வேண்டி, நீர்க்கு நிமிர்ந்து செல்லும் - நீர் பருகக் கலித்துச் செல்லும், கொங்கர் படு மணி ஆயம் சேதா - கொங்கரது ஒலிக்கம் மணி பூண்ட ஆயமாகிய செவ்விய ஆக்கள், வன்புலம் துமியப் போகி- வன்னிலங்கள் துணிபடச் சென்று, எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்-கிளப்பிய செம் மண்ணாகிய நிறம் பொருந்திய புழுதி, அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்-அகன்ற பெரிய வானின்கண் மிக்குத் தோன்றும், நனந்தலை அழுவம் - இடமகன்ற காட்டில்;

9-11. நம்மொடு துணைப்ப-நம் தலைவி நம்மொடு துணையாக, வல்லாங்க வருதும் என்னாது-வல்லபடி செலவோம் என்னாத, அல் குவர வருந்தினை - இங்கே வந்து தங்கிய அளவில் வருந்துகின்றனை; இஃதென்னை!

(முடிபு) நெஞ்சே! கல்பிறங்கு அத்தம் போகி நில்லலாப் பொருட்பிணி பிரிந்த நீ, நனந்தலை அழுவம், நம்மொடு (அவள்) துணைபப, வல்லாங்க வருதும் என்னாது அல்குவர, வருந்தினை.

(வி - ரை.) சோறும் உடன் கொண்டுபோய்க் கிணறு வெட்டு தலின், தோள்பதன் அமைத்த என்றார். கல்லுறுத்தல் - கல்லுதல், வல் உவர்-மிக்க உவர். படு - கிணறு, பார் - வன்னிலம். நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா மண்டிய போகி எடுத்த துகள் என்க. வருதும் - போவோம் என்னும் பொருட்டு. நெடுவிளி பயிற்றும் என்றத எயினர் போர்க்குச் செல்லுதல் அறிந்து பேடை துணையை அழைக்கும் என்றபடி.

80. நெய்தல்

[இரவுக்கறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.]

கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங்கழி யிட்டுச்சரம் நீந்தி யிரவின்
வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப
நினக்கெவன் அரியமோ யாமே எந்தை
5.புணர்திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பன்மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்